Saturday, February 28, 2015

On Saturday, February 28, 2015 by Unknown in ,    
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கிடையேயான கள விளையாட்டுப் போட்டிகளில் கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் (ஆண்கள்) அணியும், மதுரை வேளாண் மாணவியர் (பெண்கள்) அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் 24 அணிகளாக பங்கேற்றனர். பிப்.15-ல் தொடங்கிய இப்போட்டிகள் 22-ம் தேதி நிறைவுபெற்றது.
நிறைவு விழாவுக்கு தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி முதல்வர் மகிமைராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைவர் ஷம்புகல்லோலிகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
தடகள விளையாட்டுப் போட்டிகளில் (ஆண்கள்) பொள்ளாச்சி வானவராயர் கல்லூரி மாணவர்களும், கோவை வேளாண் கல்லூரி மாணவியரும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
தனிநபர் திறனுக்கான பரிசை பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண். மற்றும் ஊரக வளர்ச்சிநிறுவன மாணவர் எம்.பாரதிதாசனும், கோவை வேளாண். கல்லூரி மாணவி எம்.நந்தினியும் பெற்றனர்

0 comments: