Saturday, February 28, 2015

On Saturday, February 28, 2015 by Unknown in ,    
கொட்டாம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: 70 கடைகள், 30 வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன
மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டியில் பல தினங்களாக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்து வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடந்தது.
இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீசு அனுப்பியது.
இந்த நிலையில் இன்று கொட்டாம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. 70 கடைகள், 30 வீடுகள் அகற்றப்பட்டன. இதில் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பஞ்சாயத்து தலைவர் நந்தினி, வருவாய் ஆய்வாளர் மஸ்தான் கனி, தேசிய நெடுஞ்சாலை ஆய்வாளர் கலைச்செல்வன், வி.ஏ.ஓ. ரமேஷ் கண்ணன் மற்றும் பலர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை பார்வையிட்டனர்

0 comments: