Monday, March 02, 2015

On Monday, March 02, 2015 by Unknown in ,    
அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குமாரவேல் மண்டையை உடைத்ததாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் குமாரவேல் (29). அவர், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், அவரும், இளைஞர் காவல் படையைச் சேர்ந்த கோபி என்பவரும் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சக்தி தியேட்டர் அருகே குமார் (37), செந்தில்குமார் (39) ஆகிய இருவரும் மது போதையில், அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தவர்களிடம்தகராறில் ஈடுபட்டனராம். அவர்கள் இருவரையும் வீட்டுக்குச் செல்லுமாறு காவலர் குமாரவேல் கூறினார். மீண்டும் அந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டால், குமாரவேல் அவர்களுடைய இருசக்கர வாகனச் சாவியை எடுத்துக்கொண்டார். அவர்களை காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதனால், ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞர்கள் இருவரும் குமாரவேலை தாக்கி, அவரது தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பினர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் குமாரவேலை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞர்கள் இருவரையும் தேடிவந்தார். இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே இருசக்கர வானகத்தில் சென்றுகொண்டிருந்த லாரி புரோக்கரான செந்தில்குமார், கார் ஓட்டுநரான குமார் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

0 comments: