Friday, March 13, 2015

On Friday, March 13, 2015 by Unknown in ,    

மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் மமேஷ் பொய்யாமொழி, ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தார். மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர்கள் பி.மூர்த்தி (வடக்கு), மு.மணிமாறன் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, ஒன்றியச் செயலர்கள் ரகுபதி (மதுரை கிழக்கு) சிறைச்செல்வன் (மதுரை மேற்கு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 3500 பேர் ரத்ததானம் வழங்கினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மேற்பார்வையில் ரத்த வங்கிகளுக்கு ரத்தம் தானமாகப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவர்கள் 100 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

0 comments: