Friday, March 13, 2015

On Friday, March 13, 2015 by Unknown in ,    
2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும், மாவட்ட வாரியாக பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது பாமக ஆட்சி பொறுப்பேற்றால் செய்யப்போகிற திட்டங்களை பட்டியல் இட்டார் .மதுவையும் ஊழலையும் ஒழிப்பதே முதல் லட்சியம் என பேசிய அவர் சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சியாக அதிமுக  விளங்குகிறது என சாடினார் .தமிழகத்தில் தான் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர் நியமனத்திற்கு 8 லட்சம் ,ஓட்டுனர் நியமனத்திற்கு 5 லட்சம் ,நடத்துனர் நியமனத்திற்கு 3 லட்சம் செவிலியர் நியமனத்திற்கு 4 லட்சம் வீடு கட்டுவதற்கு 1 சதுர அடிக்கு 80 முதல் 150 ரூபாய் தொகை வசூலிக்கப் படுவதாகவும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என அதிமுக ஆட்சியில் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை ஊழலே மலிந்துள்ளதாக கூறினார் .நிர்வாகம் என்பதேசுத்தமாக நடைபெறாத நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா விடுதலை ஆக வேண்டும் என யாகம் நடத்துகிறார் அதில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்ற ஒரு அவல நிலை தமிழகத்தில் நிலவி வருவதாக குறிப்பிட்டார் .தன் மீது சாதி சாயல் விழவில்லை என்றும் தன்னை பொது வேட்பாளராக கருதி காமராஜருக்கு ,அண்ணாவிற்கு ,நடிகருக்கு ,கலைஞருக்கு ஒரு வாய்ப்பு  கொடுத்தது போல் மருத்துவராகிய தனக்கும் தமிழக மக்கள் வாய்ப்பு தருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் .ஜி கே மணி .வடிவேல் இராவணன் ஆகியோர் உடன் இருந்தனர்

0 comments: