Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
உடுமலை,:. பிஏபி பிரதான கால்வாயில் ஸ்லேப்புகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. எனவே கால்வாயை உடனே சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பிஏபி பாசனத்திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 90 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிஏபி பிரதான கால்வாய் மூலம் 9 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மண்டல வாரியாக பாசனம் நடைபெறுகிறது. தற்போது 3ம் மண்டல பாசனம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு  பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 comments: