Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    






திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திருப்பூர் மாவட்ட மக்களுக்கு ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் குறித்து கண்டறிவதற்காக, அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மண்டல நோய் கண்டறியும் மையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் விலை உயர்ந்த நவீன மருத்துவ பரிசோதனைக் கருவிகள் பொருத்தப் பட்டு, மக்கள் முழு உடல் பரிசோனை செய்து கொ ள்ள ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் என அரசு அறிவித்து, தற்போது மருத்துவ கருவிகளை இயக்குவதற்கான அலுவலர், நோய் தன்மை கண்டறியும் நிபுணர்கள் இல்லாததால் பல மாதங்களாக செயல்படாமல் மூடி முடங்கி கிடக்கிறது. 

இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோய் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்று அதிக கட் டணம் செலுத்த இயலா மல், பரிசோதனையும் செய்யாமல் நோய்க்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்ப டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.எனவே உரிய அலுவலர்களை நியமித்து, உடனடியாக முழு உடல் பரிசோதனைக் கூடத்தை செயல் படுத்துக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசு மருத்துவமனை முன் மா பெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வ £று தெரிவித்துள்ளனர்.

0 comments: