Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
திருப்பூர், : திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதி திருமலைநகர் முதல் வீதியில் வசிப்பவர் நந்திராஜ்(73). இவரது மனைவி பழனியம்ம ள்(95). இவர் நேற்று அதி காலை 5.30 மணி அளவில் தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத் தில் வந்த இரு மர்ம நபர்கள், பழனியம்மாள் வீட்டின் முன் நிறுத்தி,  சாந்தி தியேட்டர் செல்வதற்காக முகவரி விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த பழனியம் மாள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப் பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நந்திராஜ் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.

0 comments: