Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
திருப்பூர், :கரூர் மாவட்டம், கடவூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (75). இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியில், ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சுப்ரமணி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த பலரும் சீட்டு சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். விக்னேஷிடம் சுப்ரமணி ரூ.1.50 லட்சம் சீட்டு சேர்த்து பணம் செலுத்தி வந்துள்ளார். சீட்டு முடிவடைந்து பல மாதமாகியும் பணத்தைத் தராமல் விக்னேஷ் காலம்தாழ்த்தி வந்துள்ளார். அதையடுத்து, சுப்ரமணி அளித்த புகாரின் பேரில், வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: