Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
அவிநாசி-அத்திக்கவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாவீரன் தீரன் சின்னமலை பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
 மாவீரன் தீரன் சின்னமலை பேரவை சார்பில் தீரன் சின்னமலை 1,859-ஆவது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநிலத் தலைவர் வி.கே.முருகேசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.கே. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் கொங்கு எம்.ராஜமணி சிறப்பரையாற்றினார்.
 இதில், ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில், உயிரிழந்த 20 தமிழர்கள் குடும்பத்திற்கும் உரிய நிவாரணம்  வழங்க மத்திய, மாநில அரசுகள், ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அவிநாசி-அத்திக்கடவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஏப்ரல் 17-ல் சென்னை கிண்டியில் நடைபெறவுள்ள மாவீரன் தீரன் சின்னமலை 1,859-ஆவது பிறந்த நாள் விழாவில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள்,
சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், கொங்கு மண்டல மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments: