பிரபல பாடகர் நாகூர் ஹனீபா வின் உடல் அவரது சொந்த ஊரான நாகூரில் நேற்று மாலை இஸ்லாமிய முறைப்படி நல்ல டக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய மற்றும் திராவிட இயக்கப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற நாகூர் ஹனீபா உடல்நலக்குறைவால் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் மாலை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான நாகூருக்கு நேற்று அதிகாலை எடுத்துவரப்பட்டது.
நாகூர் தெற்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வடக்கு மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, திண்டுக்கல் பெரிய சாமி, எஸ்.என்.எம். உபயதுல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, தமுமுக எம்எல்ஏ ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக-வினர், நாகூர் ஜமாத்தார் மற்றும் ஏராள மான பொதுமக்கள் அஞ்சலி செலுத் தினர். பின்னர், மாலை 5 மணிய ளவில் அவரது உடல் ஊர்வல மாகக் கொண்டு செல்லப்பட்டு, நாகூர் தர்காவில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள அடக்க தலத்தில் இஸ்லாமிய முறைப்படி நல்ல டக்கம் செய்யப்பட்டது.