Saturday, August 29, 2015

On Saturday, August 29, 2015 by Unknown in ,    
விருதுநகரில் குற்றங்களை தடுப்பது குறித்து தென்மண்டல ஐ.ஜி. ஆய்வுதென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தென் மாவட்டங்களில் அவ்வப்போது ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
போலீஸ் நிலையங்களில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதே ஆய்வு பணி நேற்றும் நடந்தது. மாவட்ட அளவில் குற்றங்களை குறைப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதற்கான முயற்சிகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள், நில மோசடி வழக்குகள், குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? மற்றும் போக்குவரத்து விதிமீறல் பற்றிய வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி மற்றும் போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments: