Saturday, August 29, 2015

On Saturday, August 29, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்தி (36). இவரது மகள் செல்வி (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது.). இவருக்கு திருமணம் முடிக்க நினைத்த பெற்றோர் வரன் தேடி வந்தனர். திருமணம் தள்ளிப்போவதாக வருத்தமடைந்த சாந்தி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஜோதிடர் சிவசுப்பிரமணியனிடம் மகள் ஜாதகத்தை கொடுத்தார். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், ‘செல்விக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்’ என்று கூறினார். பரிகாரத்தையும் தானே செய்வதாக கூறி தனது மகன் முத்து மாரீஸ்வரன், செல்விக்கு தாலிகட்டி, ஒருநாள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் தோஷம் சரியாகிவிடும் என்று கூறினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் செல்விக்கு முத்துமாரீஸ்வரன் தாலி கட்டினார். 

இருவரும் ஒரு நாள் சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது, சிவசுப்பிரமணியன், செல்வியிடம் தனது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் அழைக்க வந்த தனது தாயுடன் செல்ல செல்வி மறுத்து விட்டார். இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் சாந்தி கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்தார். மைனர் பெண்ணாக இருந்ததால் திருமணம் செல்லாது என கூறிய ஐகோர்ட் கிளை, தாய் சாந்தியுடன் செல்வி செல்ல உத்தரவிட்டது. இதன்படி செல்வியும், தாயாருடன் சென்றுவிட்டார். 

இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஜோதிடர் சிவசுப்பிரமணியன், அவரது மகன் முத்துமாரீஸ்வரன், உறவினர் வைத்தியலிங்கம் 3 பேரும் சாந்தி வீட்டிற்கு வந்து சாந்தியின் தாய் முத்துலட்சுமியை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த செல்வியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்

0 comments: