Saturday, August 22, 2015

On Saturday, August 22, 2015 by Unknown in ,    
இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்: வைகைசெல்வன் அறிக்கை
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இளங்கோவன் தொடர்ந்து அ.தி.மு.க.வையும், புரட்சித் தலைவி அம்மாவையும் பேசி வருவது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக வந்த எவரும் இவ்வளவு கொச்சைத்தனமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் பேசியது இல்லை. ஆனால், இந்த இளங்கோவன் தலைவராக வந்தது முதல் பிரேக் இல்லாத தண்ணி வண்டிபோல் ஓடிக்கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினரே பொறுத்துக் கொள்ளாமல் கட்சியை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்திபவன், அரசியலில் கையேந்திபவனாக மாறி விட்டது. மாநிலத் தலைவர் பதவி என்பது, ஒரு நியமன பதவி, அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்ட இளங்கோவனால், ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு உயிர் வந்துவிட்டது போல பேசுவது என்பது, பிரேத பரிசோதனை முடிந்துவிட்ட பிணத்திற்கு உயிர் வந்து விட்டது என்பது போலத் தான் இருக்கிறது.
இந்திய பிரதமர் அவர்களையும், தமிழக முதல்வர் அவர்களையும் மனசாட்சியில்லாமல் கண்டபடி விமர்சித்திருக்கிறீர்களே? அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிற உங்கள் பேச்சை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இளங்கோவன் மன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்

0 comments: