Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்: பட்டாசு தொழிலாளர்களை சந்திக்கிறார்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் என்ற சுற்றுப்பயண திட்டத்தின்கீழ் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இரவு 7 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்புக்கு வருகிறார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சேத்தூரில் பொதுமக்களை சந்தித்து பேசும் அவர் இரவு ராஜபாளையத்தில் தங்குகிறார்.
நாளை (24–ந்தேதி) காலை 8 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடரும் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் வனவிலங்கு மீட்பு மையத்தை பார்வையிருகிறார். பின்னர் காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள நூற்பு ஆலைக்கு சென்று தொழிலாளர்களிடம் பேசுகிறார்.
காலை 9.55 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கடையில் தேநீர் அருந்திவிட்டு பால் உற்பத்தியாளர்களையும், நெசவாளர்களையும் சந்திக்கின்றார். 11.45 மணிக்கு சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களையும், 12 மணிக்கு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
1 மணிக்கு சாத்தூர் வரும் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணன்கோவிலில் இருந்து முக்குராந்தல் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் தீப்பெட்டி, பட்டாசு, பேனா நிப் தயாரிக்கும் தொழிலாளர்களுடன் சாப்பிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மதியம் ஆர்.ஆர். நகரில் ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு விருதுநகர் வரும் மு.க.ஸ்டாலின் அங்கு டீக்கடையில் தேநீர் அருந்துகிறார். 4.30 மணிக்கு கந்தசாமி–ராஜம்மாள் மண்டபத்தில் மூத்த குடி மக்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவன அமைப்பாளர்களிடம் பேசுகிறார். 5.30 மணிக்கு எஸ்.எஸ்.கே. மண்டலத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
6.30 மணிக்கு அருப்புக்கோட்டையிலும், 8 மணிக்கு கல்குறிச்சியிலும் 9 மணிக்கு காரியாபட்டியில் பொதுமக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

0 comments: