Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Unknown in , ,    
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி ஐ க்கான தேர்வு 08.11.2015 அன்று நடைபெற உள்ளது. TNPSC Group I தேர்விற்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச முன் பயிற்சி வகுப்பு 28.09.2015 முதல் 31.10.2015 வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலைநாட்களிலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நமது மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி;, திருச்செந்தூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; ஸ்ரீவைகுண்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. எனவே, தொகுதி 1 தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து விருப்பம் உள்ள மனுதாரர்கள் விண்ணப்பம் செய்தமைக்கான பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் 28.09.2015 அன்று மேற்படி மையங்களில் நடைபெறும் இலவச முன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 comments: