Friday, September 25, 2015
விருதுநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா
மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக
பங்கேற்றனர்.
முஸ்லிம் மக்களின் முக்கிய விழாவான பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், விருதுநகரிலுள்ள
முஸ்லிம்கள் அனைவரும் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பெரியபள்ளிவாசலில் ஜமாத் தலைவர் முகமது
எகியாகான் தலைமையிலும், செயலாளர் ராஜஉசேன் முன்னிலையிலும் இமாம் சேக்முகமது
வழிகாட்டுதலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகையை
முடித்துக் கொண்டு வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி
தியாக திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல், விருதுநகர் சின்னபள்ளிவாசலில் இமாம்
சார்நவாஷ்கான் தலைமையிலும், கல்பள்ளிவாசலில் இமாம் அப்துல்கரீம்
தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர்,
ஆவுடையாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...
0 comments:
Post a Comment