Monday, September 14, 2015

On Monday, September 14, 2015 by Unknown in ,    
ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் விஷன்–2020 அமைப்பின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த அப்துல்கலாம் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள லட்சிய இந்திய இயக்கத்திற்கான முத்திரை மற்றும் இயக்க கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.

0 comments: