Monday, September 14, 2015

On Monday, September 14, 2015 by Unknown in ,    
விதை ஆய்வு துணை இயக்குநர் சி.கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.

0 comments: