Sunday, November 29, 2015

On Sunday, November 29, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்புகளை சீரமைக்க ரூ.119.60 கோடி மதிப்பில் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக‌  மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவிற்கிணங்க சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

இன்று நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைத்தந்து மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சுற்றுலா மாளிகையில் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார், மேயர் அந்தோணி கிரேஸ் ஆகியோர் பங்கேற்று வெள்ள நீரை குடியிருப்பு பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கக்கன்ஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 238 நபர்களுக்கு நிவாரண நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.பின்னர் மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார், இது தொடர்பாக கூறும் போது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 651 குடிசை வீடுகள் பாதிக்ப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு நேற்று வரை ரூ,18.19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

இன்று (28.11.2015) மாநகராட்சிப் பகுதகளை சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 111 நபர்களுக்கும், முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் 127 நபர்களுக்கும் மொத்தம் ரூ,10.90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.29 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆனையர் பூங்கொடி அருமைக்கண், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0 comments: