Sunday, November 29, 2015

On Sunday, November 29, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 4வது நாளாக உணவு  பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் 42ஆயிரம் பேருக்கு வழங்க்பபட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. மாவட்டத்தின் புறநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் ஏறி நின்றும், படகுகள் மூலம் வெளியேறியும் பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நிவாரண பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும் வெள்ள நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்ற தேவையான மோட்டார்கள், டேங்கர் லாரிகளை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் பணியாளர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளான கோரம்பள்ளம், அய்யன்அடைப்பு, முத்தையாபுரம், குறிஞ்சிநகர், நேருநகர், பி.என்.டி.காலனி, தெற்கு வீரபாண்டியபுரம், சவேரியார்புரம், ஆரோக்கியபுரம், மடத்தூர் மற்றும் தெர்மல் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு பொட்டலங்களையும், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினர். 
மேலும் சேர்வைக்காரன் தட்டு, முடுக்குகாடு, கோவில்பிள்ளை நகர், கக்கன்ஜி நகர், மகிழ்ச்சி புரம், குரூஸ்புரம், புதுக்கோட்டை குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 42ஆயிரம் பேருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு வழங்கினர். மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மின் மோட்டார் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: