Wednesday, December 30, 2015
தமிழக
எம்.பி.க்கள், ஒற்றுமையுடன் குரல்
கொடுத்திருந்தால் ஜல்லிக் கட்டு
மசோதா
நிறைவேறியிருக்கும் என்று
தமிழ்
மாநில
காங்கிரஸ் கட்சி
தலைவர்
ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் நடைபெறும் திருமண
நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதற்காக தூத்துக்குடி வந்த
தமிழ்
மாநில
காங்கிரஸ் கட்சி
தலைவர்
ஜி.கே.வாசன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்
கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த
கன
மழையினால் 75 சதவீதம் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால்,
வாகன
ஓட்டிகள் சிரமப்படுவதுடன், எரிபொருளும் அதிகமாக செலவாகிறது. இதனால்,
சாலைகளை சீரமைக்க மாவட்ட
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் பகுதிகளில் காலங்கடந்து மழைபெய்ததால் விவசாயிகள் பயிரிட்ட சோளம்
உளுந்து, பயிர்
வகைகள்
அதிக
அளவில்
சேதமடைந்து விட்டது.
இதனால்,
அரசு
விவசாயிகளுக்கு உரிய
நஷ்ட
ஈடுவழங்க வேண்டும். கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணையில் சரியான
முறையில் தூர்
வாராததால், சாத்தான்குளம் பகுதில் உள்ள
கால்வாய்களையும் தூர்
வாராததால் கண்மாய்கள் தூர்ந்து போய்விட்டன. இதன்
காரணமாக கடலுக்கு தண்ணீர் வீனாக
கடலுக்கு செல்கிறது. வேம்பார் முதல்
ஆறுமுகனேரி வரை
உள்ள
உப்பளத் தொழிலாளிகள் மழை
காரணமாக வேலைஇல்லாமல் தவித்து வருகின்றனர்.
மீனவர்களுக்கு, மீன்
பிடி
தடைக்காலத்தில் இடைகால
நிவாரணம் வழங்குவது போல்
உப்பளத்தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க
வேண்டும். ஊரணியில் உள்ள
வண்டல்
மணல்களை விவசாயிகள் மாட்டு
வண்டியில் எடுத்துச் சென்றால், அதனை
பறிமுதல் செய்து
ரூ.40ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதனால்,
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. வண்டல்
மணல்களை இலவசமாக வழங்க
அரசு
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து செல்லும் அரசு
பேருந்துகள், 25 சதவீதம் பழுதடைந்துள்ளது. இதனை
சரி
செய்து
கிராமப்புறங்களுக்கு முறையாக பேருந்துகள் செல்ல
நடவடிக்கை எடுக்க
வேண்டும். தூத்துக்குடியில் பெய்த
கனமழையால் பல
இடங்களில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி
கிடக்கிறது. இதில்,
சுகாதாரக்குறைபாடு இல்லாமல் இருக்க
நடவடிக்கை எடுக்க
வேண்டும். வருகிற
சட்ட
மன்ற
தேர்தலில் தா.ம.க. யாருடன் கூட்டணி வைப்பது என்று
எனது
2வது
கட்ட
சுற்றுப்பயணம் முடிந்தவுடன் கண்டிப்பாக அறிவிப்பேன். மக்கள்
எண்ணப்படியும், தொண்டர்களின் உணர்வுடன் கூட்டணி அமையும்.
செய்தியாளர்கள் விஜயகாந்த் குறித்து கேள்வி
எழுப்பிய போது,
அரசியல் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் சுமூகமாக நடந்து
கொள்ள
வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு
கட்சி
மீது,
மற்றொரு கட்சிக்கு கோபம்,
தாபம்
வரும்
இது
தமிழக
அரசியலில் புதியது இல்லை.
கருத்து மோதலால் மக்களின் இயல்பு
வாழ்க்கை பாதிக்காத வகையில் கட்சிகள் நடந்து
கொள்ள
வேண்டும். சிறு,
சிறு
பிரச்சனைகள் வந்தால் காவல்
துறை
நடவடிக்கை எடுத்தால் அதில்
இருந்து தப்ப
முடியாது.
தமிழர்களின் வீர
விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த
அனுமதி
பெற்றுத் தருவதற்காக மத்திய
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது. கடந்த
நாடாளு
மன்ற
கூட்டத்தொடரில், பி.ஜே.பியும் காங்கிரஸ் கட்சியும் மோதல்
காரணமாக பல
மசோதாக்கள் நிறைவேறாமல் போய்விட்டது. தமிழக
எம்.பி.க்கள், ஒருமித்த கருத்துடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு குரல்
கொடுத்திருந்தால் மசோதா
நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றார்.
பேட்டியின் போது
தமாக
மாவட்ட
தலைவர்கள், பி.கதிர்வேல் (வடக்கு), எஸ்.டி.ஆர். விஜயசீலன் (தெற்கு),
ராமசுப்பு எம்.பி., மாநில இணைச்செயலாளர் முரளிதரன், தமாக
நிர்வாகிகள் கே.டி.எம்.ராஜா,
எடிசன்,
மணிகண்டன், கனவேல்,
ஐ.என்.டி.யூ.சி. ராஜகோபால், பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment