Sunday, December 06, 2015

On Sunday, December 06, 2015 by Unknown in , ,    
நிவாரண நிதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் போலி தொண்டு நிறுவனங்களிடம் மக்கள் பணத்தை அளித்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

சென்னை மற்றும் கடலூரில் பெய்த கனமழையால், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் வீட்டிற்குள்ளேயே வெள்ளம் புகுந்துவிட்டது. அதனால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்கள் முழுவதும் வெள்ளம் நிரம்பியுள்ளதால், வெளியே வரமுடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவர்களுக்கு உதவும் வகையில் சேவை உள்ளங்கள் கொண்ட அன்பு உள்ளங்கள் தங்களது ஊர்களிலிருந்து பொது மக்கள் உணவு, உடை போன்றவைகளை அனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், இதை பயன்படுத்தி தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில போலி அமைப்புகள் பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்குமாறு குருந்தகவல்களை பரப்பி வருகின்றனர். இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.  இதுபற்றி ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் கேட்ட போது, நன்கொடை அளிக்க விரும்புவர்கள் இயற்கைப் பேரழிவுகள், பெரும் விபத்துக்கள் போன்றவைகளின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ விரும்புவோர் முதலமைச்சர் சிறப்பு நிதியுதவிக்கு அளிக்கலாம்.  முதலமைச்சர் "பொது நிவாரண நிதி, அரசு இணைச்செயலாளர் மற்றும் பொருளாளர் நிதி" (மு.பொ.நி.நி. நிதித்துறை) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றார். 

0 comments: