Thursday, January 07, 2016

On Thursday, January 07, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் இம்மானுவேல் மகன் வக்கீல் லூக்காஸ்சிக்ஸ்.
இவர் சம்பவத்தன்று திருச்செந்தூர் ரோடு ஆலந்தலை அருகே செந்தூர் நகரில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் லூக்காஸ் சிக்ஸ் வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் லூக்காஸ்சிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுசம்பந்தமாக, தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஏழு சதவீதம் வட்டியுடன் ரூபாய் 22,13,512 வழங்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்துக்கழக நிர்வாகம் இழப்பீட்டுத்தொகை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் இழப்பீட்டுத் தொகைக்கேற்ப மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பஸ்களை அமினா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடித்ததால் ஒரே நேரத்தில் 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த சம்பவம் பேருந்துநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: