Wednesday, January 06, 2016

On Wednesday, January 06, 2016 by Unknown in , ,    

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நிவாரணத் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு தெரிவித்த கோரிக்கையை ஏற்று மத்திய குழு இன்று (6.1.2016) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.
மத்திய அரசின் உள்துறை கூடுதல் ஆணையாளர் திரு.ஒய்.ஆர்.மீனா, எரிசக்தித்துறை உதவி இயக்குநர் திரு.சுமீத் கோயல், ஊரகவளர்ச்சித்துறை இயக்குநர் திரு.வி.சி.பேகரா ஆகிய மூன்று நபர்கள் கொண்ட குழு வருகைத்தந்தது.
முதலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதிப்பு குறித்து  மத்திய குழுவினருக்கு விளக்கப்பட்டது.
தொடர்ந்து எட்டையபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்ப்பட்ட பாசிப்பயிறு விளை நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மின் மோட்டார்கள் மூலம் நீர் இறைக்கு பணியை நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அந்தோணியார்புரத்தில் நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக இணைப்புச்சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் உறுதியளித்தார்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய ஏதுவாக நிதி ஒதுக்கீடு தேவை விபரங்கள் அடங்கிய கருத்துரு மத்திய குழுவிடம் வழங்கப்பட்டது.  அதன்படி 20 துறைகளின் 1076 பணிகள் தற்காலிக சீரமைப்பிற்காக ரூ.110.35 கோடியும், 1565 பணிகள் நிரந்தர சீரமைப்பிற்காக ரூ.627.39 கோடி எனவும் மொத்தமாக 2641 பணிகளுக்கான ரூ.737.75 கோடி தேவை என கருத்துரு வழங்கப்பட்டது.
இந்ந நிகழ்வுகளின் போது நகராட்சி நிர்வாக ஆணையர் திரு.கோ.பிரகாஷ்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அஸ்வின் கோட்னீஸ்,இ.கா.ப., மாண்புமிகு மேயர் திரு.அ.பா.ரா.அந்தோணிகிரேஸ், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.வெ.ஜெயக்குமார், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பிச்சை, சார் ஆட்சியர் திரு.கோபாலசுந்தரராஜ்,இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.பூங்கொடி அருமைக்கண்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்n சல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: