Sunday, January 10, 2016

On Sunday, January 10, 2016 by Tamilnewstv in    
48 எம்.பிகளை வைத்துக்கொண்டு அதிமுக நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்காக குரல் எழுப்பவில்லை – ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றுத்தந்ததில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கிய பங்கு உண்டு என வைகோ பாராட்டு
 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக அனைத்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்  வைகோ தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கிளிடம் பேசும்போது ….  தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் துரதிஷ்டமானதுää அடிப்படையே புரிந்துகொள்ளாமல் கருத்து தெரிவித்திருப்பது தமிழர்களின் இருதயத்தை காயப்படுத்தும் சொல்லாகும்ää அவர் அதை திரும்பப்பெற்றுக்கொண்டால் தான் அது சரியாக இருக்கும் இது கடும் கண்டனத்திற்குறியது என்றார். தேமுதிக பொதுக்குழுவில் அதிமுகää திமுக பிடிக்காது என்று சொன்னது மட்டுமல்லாமல்ää திமுகவோடு கூட்டு சேர்ந்தால் அது புதைகுழியில் இறங்கியதற்கு சமம் என்று சென்ற வாரம் சொல்லியிருந்தார் அது ஒரு ரவுடி கட்சி என விஜயகாந்தின் துணைவியாரும் தொடர்ந்து கூறி வருகிறார்ää அது மட்டுமல்ல 2011ல் திமுகவின் அக்கிரமங்களை அழிப்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டனி அமைத்ததாகவும் கூறியிருந்தார். திமுகää அதிமுக ஆகியி இரண்டு கட்சிகளையும் விஜயகாந்த் சமதூரத்தில் வைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். நாங்களும் மக்கள் நல கூட்டனி சார்பில் கேப்டனை சந்தித்தோம்ää அவர் தேமுதிக மாநாட்டில் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார் என்றார்.  அதிமுக முயற்சியால் தான் ஜல்லிக்கட்டு கொண்டுவரப்பட்டது போன்ற தோற்றத்தில் அதிமுகவினர் பல இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனரே என்ற கேள்விக்கு …தமிழகத்தில் எந்த காரியத்தை யார் செய்தாலும் அதை மற்றவர்கள் அதற்கு ஆதாயம் தேடுவது தமிழ்நாட்டு அரசியல் வழக்கம்.அதிமுக ஜல்லிக்கட்டிற்காக நாங்கள் அனுமதி பெற்று தந்துவிட்டோம் என்கிறார்களே 48 எம்.பி.க்கள் உள்ளனரே நாடாளுமன்றத்தில் இதற்காக அழுத்தமான குரல் கொடுத்து அரசாங்கத்தை பதில் சொல்ல வைத்தார்களா என கேள்வி எழுப்பினார். இவர்கள் ஒரு வேலையும் செய்யவில்லை மாறாக ஒப்புக்கு கடிதம் மட்டுமே எழுதி வந்தனர் என்றார். இந்த விஷயத்தில் பொன்.ராதகிருஷ்ணனை நான் பாராட்டுகிறேன் என்றார். முந்தய அரசும்ää தற்பொழுதைய அரசும் தமிழர்களை கொலை செய்கின்ற சிங்கள அரசிற்கு நண்பனாக இருந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்களுக்கும் பச்சை துரோகம் செய்து வருகின்றனர் என்பதால் தான் நான் கருப்பு கொடி காட்டி கூட்டனியை விட்டு வெளியே வந்தேன்  தமிழக மீனவர்களுக்கு முந்தய அரசும்ää இப்போதைய அரசும் துரோகம் இழைக்கிறது என வைகோ குற்றம்சாட்டினார்.

0 comments: