Tuesday, January 05, 2016

On Tuesday, January 05, 2016 by Unknown in , ,    
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. இதையடுத்து தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 23–ந் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முத்தம்மாள் காலனி, தனசேகரன்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தன. நெல்லை மாவட்டத்ல் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் கடந்த மாதம் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள சேத ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். தற்போது மத்திய குழு மீண்டும் தமிழகம் வந்துள்ளது. இன்று அக்குழுவினர் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
பின்னர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு வர உள்ளனர். மத்திய அரசின் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.
அவர்கள் முதலில் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர். பின்னர் நகர் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிடுகின்றனர். தமிழக அரசு வகுத்து தரும் பட்டியல் அடிப்படையில் மத்திய குழவினர் வெள்ள சேதப்பகுதிகளை பார்வையிடுவார்கள் என தெரிகிறது.

0 comments: