Friday, July 22, 2016

On Friday, July 22, 2016 by Tamilnewstv in
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்  உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில் எதிர்ப்பு தினம்
புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் உள்ள  கான்ஸ்டிடியூஷன் கிளப் ஸ்பீக்கர் ஹாலில் ஜூலை 21  வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை தேசியத் தலைவர் இ.அஹமது எம்.பி. தலைமை யில் நடைபெற்றது. 
தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்புரை ஆற்றினார். கேரள மாநில தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தொடக்க உரை நிகழ்த்தினார். தேசுய பொருளாளரும், கேரள முன்னாள் அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
தமிழகத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான்(முன்னாள் எம்.பி.,) தேசிய துணை செயலாளர் எச். அப்துல் பாசித் எக்ஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட20 மாநிலங்களிலிருந்து 65 செயற்குழு உறுப்பினர்கள்  பங்கேற்றனர்.
அக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
1. பொது சிவில் சட்டத்திற்கு
எதிராக எதிர்ப்பு தினம்
இந்தியா முழுவதும் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் நிர்ணய சபை உரு வாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேலும்,  பொது சிவில் சட்டத்தை அமல்படுத் தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகி றது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களின் நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கு இந்திய அரசி யல் அமைப்பு சட்டத்தின் முன்னுரை வழிவகை செய்துள் ளது. அவர்களது விருப்பப்படி எந்த மதத்தையும் பின்பற்ற  மற்றும் பரப்புரை செய்வதற் கான அடிப்படை உரிமையை  அரசியல் அமைப்பு சட்டத்தின்  25 மற்றும் 26-வது பிரிவுகள் வழங்கியுள்ளன.
மேலும், அவர்களது மத சார்பான நிறுவனங்களை ஸ்தாபிக்கவும், அதனை நிர் வகிக்கவும் உரிமை அளிக்கிறது. 
இந் நிலையிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வதற்கான ஆலோசனைகளை வழங்க சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தர விட்டுள்ளது.
தனியார் சட்டங்களுக்கு மாற்றாக பொது சிவில் சட் டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால், அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு வழி வகை செய்யும்.
இதுபோன்ற சட்டத்தை நாட்டில் அமல்படுத்தி னால் தேசத்தின் பன்முகத் தன்மையை அது சிதைத்து விடும். சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும். முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறு பான்மையினரின் கலாச்சார தனித் தன்மை மற்றும் மத நம்பிக்கை கள் பறிபோய் விடும்.
இக் கூட்டம் பொது சிவில் சட்டத்திற்கு நிகரான தனது நிலைப்பாட்டை உறுதிப் படுத்துகிறது. மேலும் அரசியல் அமைப்பு சட்டத் தின் பிரிவு 44 ஐ நீக்கும்படி மத்திய அரசை வலியுறுத்துகிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சிக்கவும் முற்றுப்புள்ளி வைக்க விரும்பு கிறது.
பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் எதிர்ப்பு தினத்தை கடைபிடிப்பதற்கான தேதியை நிர்ணயிக்க இக் கூட்டம் முடிவு செய்கிறது. 
இந் நாளில் ஷரீ அத் பாது காப்பு குறித்த மாநாடுகள் மற்றும் கருத்த ரங்குகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இந்த தினத்தில் ஷரீஅத் பாதுகாப்பு தினத்தை நடத்த அனைத்து மாநில மற்றும் உள்ளூர் குழுக்களையும் கேட்டு கொள்கிறது.
ஒத்த கருத்துடைய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியக் குழு வேண்டு கோள் விடுக்கிறது.
2  காஷ்மீர் - ஆயுதச் சட்டத்தை திரும்பப் பெறுக!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  சில வாரங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து இக்கூட்டம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த சம்பவத்தால் 50-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர்.  1000-க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.  புல்லட் கன் துப் பாக்கிச் சூட்டால் ஏராளமா னோரின்  கண் பார்வை பறி போகும் அளவுக்கு  கடுமையான காயங்கள் ஏற் பட்டுள்ளன. 
பொது மக்கள் உணவு, மின்சாரம், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை ஏதுமின்றி குடிப்பதற்கு நீர் கூட  கிடைக்காமல் வீடுகளில்  முடங்கி கிடக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பள்ளத் தாக்கு நாட்டிலிருந்து தனி மைப்படுத்தப்பட்டுள்ளது. 
அநீதிக்கு எதிராக போராடு பவர்களை பயங்கரவாதிகள் போன்று மாநில அரசும், மத்திய அரசும் சித்தரிக்கின்றன. சிறப்பு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டங்கள் தவறுதலாக பயன்படுத்தப் பட்டு வருவதால் அங்கு நிலைமை மேலும் மோச மடைந்து வருகிறது.  பத்திரி கைகள் வெளியிட தடை செய்யப்பட்ட சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.  அந்த பள்ளத் தாக்கில் பதட்டத்தை உருவாக் கும் பாகிஸ்தானின் முயற்சி களை நாங்கள் கண்டிக்கிறோம்.
காஷ்மீர் மாநிலத்தில் சகஜ நிலை உருவாவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.
அதற்கு வழி செய்யும் வகையில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை  நீக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
3. அலிகர்,  ஜாமியா மில்லியா பல்கலை சிறுபான்மை அந்தஸ்து
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல் கலைக்கழகம் ஆகியவற்றின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து மத்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட் டிற்கு இக் கூட்டம் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கல்வி நிலையங்க ளின் சிறுபான்மை அந்தஸ்தை பறிக்கும் முயற்சியை இந்த கூட்டம் கடுமையாக எதிர்க் கிறது மற்றும் கண்டிக்கிறது. மத்திய அரசின் இந்த நட வடிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்  சிறு பான்மையினருக்கு அளிக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமை களை பறிக்கும் செயலாகும்.
குறிப்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான மர்ஹும் சர்.சையது அஹமது கானால் அரும்பாடுபட்டு நிதி திரட்டி இந்த பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
நாட்டில் இதர சமுதாயத் தினருடன் ஒப்பிடும் போது  முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியுள்ள நிலையில் உள்ள னர். 
சிறுபான்மையினர் சமுதா யத்தினருக்கு உயர்கல்வி அளிப்பதில் இந்த கல்வி நிலை யங்கள் முக்கிய அங்கம் வகிக் கின்றன. இதுமட்டுமின்றி சுதந் திரத்திற்கு முந்தைய தேசிய இயக்கத்தில் இந்த கல்வி நிலையங்கள் உந்து சக்தியாக திகழ்ந்தன. 
இந்த கல்வி நிலையங் களின் சிறுபான்மை அந்தஸ் திற்கு முந்தைய அரசுகள் அனைத்தும் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் ஆதரித்து வந்தனர்.
இதர சமுதாயத்திற்கு இணையாக சிறுபான்மையி னர்கள் உயரும் வகையில் புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை உருவாக்குவதற்கு பதிலாக  சிறுபான்மையினரால் நிர்வகிக்கப்படும் குறைந்த அளவிலான கல்வி நிலையங் களையும் இந்த அரசு பறிக்க முயல்கிறது.
அலிகர் முஸ்லிம் பல் கலைக் கழகத்திற்கு எதிரான எதிர்மறை அணுகுமுறையால் கேரளாவில் உள்ள மலப்புரம், மேற்கு வங்காளம் முர்ஸிதா பாத், பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் ஆகிய வளாகங் களில் இடர்பாடுகள் ஏற்பட் டுள்ளன.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ்லா மியா பல்கலைக் கழகங்கள் சம்பந்தமாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், சப்கா சாத் - சப்கா விகாஸ் எனப்படும் அனைவரும் ஒன்று படுவோம்; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெறும் வெற்று வாக்குறுதி யாக அமைந்து விடும்.
முஸ்லிம் சிறுபான்மை யினரின் கல்வி வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழும் இந்த கல்வி நிலையங்கள் விஷயத்தில்  அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படாமல் இருக்கும்படி மத்திய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
4. முஸ்லிம் தலைவர்கள், அறிஞர்கள் மீதான  தவறான குற்றச்சாட்டுகள்
பொய்யான காரணங்கள் மூலம் பயங்கரவாதத்தை  தூண்டுவதாக முஸ்லிம் மதத் தலைவர்கள் மீது அபாண்ட மாக குற்றம் சாட்டுவது  அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  சமுதாயத்திற்கு இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக் கிறது.
குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை கண்டு பிடித்து  அவர்களுக்கு கடுமை யான தண்டனை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.  அதேசமயம்,  எந்தவித குற்றச் சாட்டும் இல்லாத நிலையில் மற்றும் குற்றம் செய்ததற்கான ஆதாரமின்றி அப்பாவி மக்களை தண்டிப்பதை ஏற்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை வெளிடுதல் அல்லது புல னாய்வு அமைப்புகளால் இந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையில் ஊடக சந்திப்புகள் நடத்தப்பட்டு   தீர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.
முஸ்லிம் சமுதாயத்தின்  கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் சில ஊடகங்கள் பார பட்சமாக செயல்படும் சூழ் நிலை தற்போது உருவாகியுள் ளது.
நமது நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக சில ஊடகங்களின் செயல்பாடு களால் ஊடகங்களுக்கு அவப் பெயர் ஏற்படுகிறது.
நமது இந்திய ஜனநாயகத் தின் 4-வது தூணாகத் திகழும் ஊடக சகோதரர்கள் தேசத்தின் ஒருமைப்பாட்டை காக்கவும்,  உயர்மதிப்புகளை நிலைநிறுத்த வும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5. முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான தவறான குற்ற வழக்குகள்
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு விசாரணை குற்றவாளிகளாக நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்படுகின்றனர்.  பல வழக்குகளில் இதுபோன்று அப்பாவி முஸ்லிம்கள் செய்யாத குற்றங்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை பெற்ற பின்னர் குற்றமற்றவர்கள் என விடு விக்கப்படும் நிலை உள்ளது. இவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. இவர்களுக்கு போது மான அளவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
6. பயங்கரவாதம்
உலக அளவில் பயங்கர வாதம்  தொடர்பான அச்சுறுத் தல்கள் அதிகரித்து மாபெரும் இடர்பாடுகள் உருவாகி வரு கின்றன. இதனால் பல ஆயிரக் கணக்கில் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு அகதி களாக அண்டை நாடுகளுக்கு குடிபுகும் நிலை உருவாகியுள் ளது.  இதன் மூலம் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
நிர்வாக சீர்கேட்டால் பல நாடுகளில் ஸ்திரமற்ற தன்மை உருவாகியுள்ளது. பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளா தார வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்பட் டுள்ளது.  ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர். பயங்கரவாத அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகளை இஸ்லாமிய பயங்கரவாதிகளாக உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
  ஆனால் உண்மையிலேயே இந்த  அமைப்புகளின் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் கொள்கைக்கு எதிரானவை.
இந்த பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் மனிதாபிமான மற்றும் அமைதி ஆகிய இஸ்லாத்தின் கொள்கைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் இஸ்லாத்துக்கு எதிரான அமைப்புகள் செயல்பட்டு வரு கின்றன என்று நம்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின்  அனைத்து வகையான தீவிர வாத நடவடிக்கைகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டிக்கிறது. 
இதுபோன்ற அமைப்புகள் மதத்தின் பெயரால் இளைஞர் களை பயன்படுத்தி வருகின்ற னர் என்று நம்புகிறோம்.
தீவிரவாதம் உள்ளத்தில் தான் ஏற்படுகிறது. எனவே இதனை முதலில் அகற்ற வேண்டும். இந்த பயங்கரவாதத்திற்கான  அடிப் படை காரணிகளை சரியான தொடக்கப் புள்ளியிலிருந்தே  களைய வேண்டும்.
தனி நபர்களின் உள்ளத் திலிருந்து தீவிரவாத எண் ணத்தை அகற்றி அமைதியின் பக்கம் அவர்களை ஈர்ப்பது தான் இந்த தொடக்கப் புள்ளி யாகும்.
எனவே, பயங்கரவாதத் திற்கு எதிரான தனது பிரச் சாரத்தை தொடர்ந்து தீவிரமாக நடத்துவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இச் செயற்குழு முடிவு செய்கிறது. 
7. தோல்வியடைந்து விட்ட
பொருளாதார கொள்கை
மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதார கொள்கை நாட்டை சீரழித்து வருகின்றன. இந்த பொருளாதார கொள்கை மூலம் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகி றார்கள். நடுத்தரவாதிகள் நடு வீதியில் நிற்கிறார்கள்.
இந்தியா தனது பொருளா தார ஸ்திரத்தன்மையை இழந்து வருவதால் பொருளா தார அடிமைத்தனம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட் டுள்ளது.
மோடி அரசின் இந்த பொருளாதார கொள்கை குளறுபடிகளிலிருந்து இந்த தேசம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
8. தலித் மக்கள் மீது தாக்குதல்
குஜராத்தில் தலித் சமூக மக்கள் கொடூரமாக தாக்கப் பட்டு வருகிறார்கள். மாட்டி றைச்சி, மாட்டுத்தோல் என்பதையெல்லாம் காரணம் காட்டி அவர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. 
இந்த அட்டூழியங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப் பட்டு, நிரந்தராக அடக்கப்பட வேண்டும். இது விஷயத்தில் தேசம் ஒன்றுபட வேண்டும் என இக் கூட்டம் வேண்டு கோள் விடுக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.