Saturday, July 23, 2016

On Saturday, July 23, 2016 by Tamilnewstv in
jpUr;rp 23.7.16                rghpehjd; 9443086297

திருச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக  மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.


அதில் பேசிய பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூபாய் 18000 என்பதனை மாற்றி 26000என்று அறிவிக்கவேண்டும் மேலும் பல்வேறு இதரப்படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் அளித்துமத்திய அரசு கொண்டுள்ள புதியக்கல்வி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களின் 6வதுஊதியககுழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து 7வத ஊதியக்குழுவை நிதி அமைச்சர் ஏற்றுக்கொள்வதாக கூறியது வரவேற்க வேண்டியது என்பதும் பாராட்டக்கூடியது என்று கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் கரூர் மாவட்டசெயலாளர் அமுதன் திருச்சி மாவட்டதலைவர் சேவியர் பால்ராஜ் மாவட்டபொருளாளர் சங்கர் மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் பிரின்ஸ் சிவக்குமார் குளித்தலை வட்டாரச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


பேட்டி பொதுச்செயலாளர் ரெங்கராஜன்