Saturday, July 23, 2016

On Saturday, July 23, 2016 by Tamilnewstv in
திருச்சி 23.7.16                                  சபரிநாதன் 9443086297
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் திருச்சி கரூர் புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மாவட்ட  தலைவர்கள் கூட்டம் மலர்சாலை அண்ணமலை நகரில் மாநில தலைவர் அய்யகண்ணு தலைமையில் மாநில துணைத்தலைவர் கரூர் கிட்டப்பா ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள் திருச்சி சண்முகசுந்தரம் கரூர் பழனிவேலு புதுக்கோட்டை சேகர் அரியலூர் தங்கராசு பெரம்பலூர் சின்னசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என
தலைவர் அய்யாகண்ணு கூறுகையில்
காவிரி வற்றி விட்டது நதிநீர் பிரச்சனையை நான் ஜெயித்ததும் நதிகளை இணைத்து விவசாயிகள் பிரச்சனை தீர்த்து விடுவேன் என்று பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி கூறினார் ஆனால் நிறைவேற்றவில்லை தற்போது விவசாயிகள் தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்படுகிறார்கள் ஆதலால் மோடிக்கு நல்ல மனதையும் எண்ணத்தையும் விவசாயிகள்  மேல் அன்பையும் ஆதரவையும் கொடுக்க கருணைகாட்டவும்; மோடி தேர்தலில் வெற்றி வாரனாசி காசியில் விஸ்வநாதரை வணங்கி பர்ஜன்ய சாந்தி ஹோமம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

பேட்டி  அய்யாக்கண்ணு