Saturday, July 23, 2016
On Saturday, July 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23-07-2016 சபரிநாதன் 9443086297
தமிழக பட்ஜெட் அதிருப்தியாக உள்ளதாக போக்குவரத்து துறை பணியாளர் சம்மேளனம் அறிவித்து உள்ளது
அகில இந்திய போக்குவரத்து சம்மேளனத்தின் தேசிய தலைவர் கு.பாலசுப்பிரமணியம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்….. தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் ஒருகிணைப்பு மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் போக்குவரத்தில் தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டில் போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பான 7வது சம்பள கமிஷனை ரத்து செய்து 6வது சம்பள கமிஷன் அடிப்படையிலேயே ஊதியம் வழங்குதல் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயும் ஓய்வ10தியமாக 9 ஆயிரம் ரூபாயும்ää புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் பட்ஜெட் அரசு பணியாளர்களுக்கு திருப்தி தரவில்லை. அதிருப்தியாக உள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரிலேயே அரசு பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தொடர்ந்து கூறும்போது….. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நீக்கப்பட்டதை அறிந்த செல்வராஜ் சங்க பணம் 5 லட்சம் ரூபாயை அவர் முறைகேடாக கையாடல் செய்துள்ளார். அவர் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்று கூறினார். பேட்டியின் போது சிறப்பு தலைவர் சிவக்குமார் பொது செயலாளர் குப்புசாமி முன்னாள் தலைவர் பால்பாண்டியன்ää தமிழ்நாடு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...