Saturday, July 23, 2016

On Saturday, July 23, 2016 by Tamilnewstv in
திருச்சி 23.7.16                  சபரிநாதன் 9443086297
தமிழ்நாடு வேளாண்மைப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக 53 மாநில பொதுக்குழுக்கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

நடைபெற்ற கூட்டத்தில் துறையில் காலியாக உள்ள 106 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை உதவிப்பொறியாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கி நிரப்புவதற்கு தலைமைப் பொறியாளர் அவர்களால் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காலியாக உள்ள 106 உதவிப்பொறியாளர் பணியிடங்களையும் உதவிப்பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு 3:2 என்கின்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் நிரப்பிட வேண்டும் துறையில் தற்போது ஏறத்தாழ 537 இளநிலைப்பொறிளாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் உதவிப் பொறியாளர்கள் 262 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.34 வேளாண்மைத்துறை நாள் 17.2.15 க்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் 3:2 என்கின்ற விகிதாச்சாரத்தின் கடைப்பிடித்திட வேண்டும்  என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.