Saturday, September 03, 2016

On Saturday, September 03, 2016 by Tamilnewstv in
திருச்சி  3.9.16              

திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழாவில் லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் மற்றம் அவருடைய ஆதரவாளர்களை அஇஅதிமுகவினர் நாற்காலி வீசி தாக்கினர்.  
திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் லால்குடி திமுகசட்டமன்ற உறுப்பினர் ;வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மாவட்டஆட்சித்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர் 
இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தனக்கு பேச வாய்ப்பு அளிக்க கேட்டபொழுது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நன்றியுரை கூறச்சொல்லியுள்ளார் அதற்கு தனக்கு பேச வாய்ப்பு வேண்டும் என்று லால்குடி சட்டமன்ற உறுப்பினர் கேட்ட பொழுது மக்கள் தொடர்பு அதிகாரி  தேசிய கீதம் பாடத்தொடங்கிவிட்டது என்று சொல்லி பேச வாய்ப்பு இல்லை என்று மறுத்துள்ளார் அதற்கு லால்;குடி  சட்டமன்ற உறுப்பினர் ஏன் இப்படி செய்கிறீர்கள் இது நியாயமா என்று பேச அஇஅதிமுக  தொண்டர்கள் நாற்காலிகளை வீசி லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் அவருடை ஆதரவாளர்களை தாக்கினர்
அப்பொழுது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் பேசியபோது குமுலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் இல்லை மக்கள் தண்ணீருக்கு அவதிபடுகிறார்கள் லால்குடி மேம்பாலம் பணி முடிவடையவில்லை  ரயில்வே கேட்டை நிறந்தரமாக மூடிவிட்டனர் திருச்சி மாவட்டம் இலால்குடியில் இலால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் 143 ஆண்டு முன்பு கட்டப்பட்டது இந்த கட்டிடத்தில் வருவாய்  வட்டாச்சியர் அலுவலகம் முதன்மை உரிமையியல் நீதிமன்றம் பொதுப்பணித்துறை அலுவளகம் குற்றவியல் நீதிமன்றம் கிளைச்சிறைச்சாலை பத்திரபதிவு அலுவலகம் போன்ற பத்துக்கு மேற்பட்டஅலுவலகங்கள் இந்த கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிஅலியாஸ்சங்கரன் 4.11.15 கட்டிடம் பழைமை அடைந்து விட்டது அதனை மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் பரிந்துறை செய்துள்ளார் அதற்கு முன்னாள் அமைச்சர் நேருவும் தன்னுடை சொந்த இடத்தை அரசுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார் ஆனால் அரசும் அமைச்சர்களும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை இதனை நான் விழா மேடையில் பேசினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதற்காக என்னை பேசவிடவில்லை மக்கள் பணியாற்ற என்னை விடவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பேட்டி லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்