Tuesday, November 08, 2016

On Tuesday, November 08, 2016 by Tamilnewstv in    
திருச்சி 8.11.16
தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் இயக்கம் சார்பில் முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் தேவை ஒரு வரையறை என்பது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
அதைப்பற்றி காமிலா நிர்மான உறுப்பினர் கூறுகையில் முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) அப்ளிகேஷன்  ஆக்ட் 1937 என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாரம்பரியமான வழக்கமுறை சட்டங்களை தொகுக்கும் வண்ணம் கொண்டு வரப்பட்டது
விவாகரத்து பெறுவது என்பது பல முஸ்லிம் பெண்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தமையால் அவர்கள் மாற்று மதத்திற்கு மாறுவதன் மூலம் விவாகரத்து பெற்றார்கள். இதனை ஒழுங்குகபடுத்தவே 1939 ஆண்டு முஸ்லிம் விவாகரத்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை வரையறக்கப்படவேண்டும் என்றும் அதனை வழியுறுத்தி வரும் 18 ஆம்தேதி பேரணி மற்றும்; கடிதம் எழுதி அதன் மூலம் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

பேட்டி காமிலா

0 comments: