Sunday, July 30, 2017

On Sunday, July 30, 2017 by Tamilnewstv in    
திருச்சி           30.07.17

*மழை வேண்டி சிறப்பு தொழுகை திருச்சியில் இன்று நடைபெற்றது*

மழை சரி வர பெய்யாத காரணத்தால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சனை சந்திக்காத திருச்சி போன்ற மாவட்டங்களில் கூட தற்போது மழை பொய்த்து போன காரணத்தால் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் இருந்து வருகிறது.

காவிரியில் நீர் இல்லாத காரணத்தால் திருச்சி மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் கூட இரண்டு நாளுக்கு ஒரு முறை தான் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மழை உரிய நேரத்தில் பெய்யாதது தான் என கூறப்படுகிறது.


இந்நிலையில் மனிதர்கள் செய்த தவறுக்காக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டும்,மழை வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.தொழுகை முடிந்த பின்பு அவர்கள் கைளை உயர்த்தி மனமுறுகி பிராத்தனையில் ஈடுபட்டனர்.திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் த.மு.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள்,பெண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி: சஃபியுல்லாகான் - மாநில செயலாளர் த.மு.மு.க

0 comments: