Wednesday, February 19, 2020

On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 19.02.2020

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து  காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை  தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி வட்ட தலைவர் சுகுமார், புள்ளம்பாடி வட்ட தலைவர் அர்ஜுனன், நகரத் தலைவர்கள் செல்வகுமார், அய்யாவூ, INTCU மாவட்ட தலைவர் துரைராஜ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி காங்கிரஸார் என 100-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்..

பேட்டி:  கலை(வடக்கு மாவட்ட தலைவர்)

0 comments: