Wednesday, March 04, 2020
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தஞ்சாவூரில், சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த,
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியை கனிமொழி என்பவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. `சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர், இன்று தன் உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்துவிட்டு, எங்களை விட்டுச் சென்றுவிட்டார்’ என்று கண்ணீரில் குடும்பத்தினர், .
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கார் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கனிமொழியை மீட்டு, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்து, அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கனிமொழியின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க, அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.ஒரு சிறுநீரகம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என மொத்தம் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை மற்றும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன அவர்கள் குடும்பத்தினர் கூறும்போது
எங்களுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்கே பெருமை தேடித் தந்தவர். சின்ன வயசிலேயே தொல்பொருள் அறிஞராக வர வேண்டும் என நினைத்தார். அதன்படி, தான் நினைத்ததைத் தன் கடின உழைப்பால் சாதித்தார். இன்னும் சாதிக்கவேண்டிய பொண்ணு. அதற்குள் இந்த விபத்து, அவர் கனவில் மட்டுமல்ல எங்கள் எல்லோர் மனத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. வாழ்கையில் பெரும் உயரத்திற்குச் செல்லக்கூடியவளை, இவ்வளவு சீக்கிரமே இறைவன் அழைத்துக்கொண்டு, எங்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளான். இதை எப்படி நாங்க தாங்கப் போகிறோம் எனத் தெரியவில்லை.சிறு வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவள், தன் உடல் உறுப்புகளைப் பலருக்குத் தானமாகக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாள் என்று அவர்கள் குடும்பத்தினர் கூறினார்கள்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment