Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி:

குடியிருப்பு பகுதியை போலி ஆவணம் மூலம் காலி செய்ய முயற்சிப்பதாக ஆட்சியர் சிவராசுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருச்சி மேலசிந்தாமணி, பழைய கரூர் சாலையில்  நங்கவரம் பண்ணைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் நாடார் தெருவை உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குடியிருப்பதற்காகபிரித்து வழங்கப்பட்டது.
 பல தலைமுறைகளாக சுமார் 100 குடும்பத்தினர் அங்கே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தை சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் போலி ஆவணத்தை வைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் ஒரு கட்டமாக அந்த இடத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணிக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் சகாதேவ பாண்டியன் தலைமையில் திரண்டு வந்தனர். ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
 பேட்டி: ரவி

0 comments: