Tuesday, April 07, 2020

On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல்  காரணமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விதமான பேருந்து மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் பலர் தமிழகத்தில் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். இவர்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே பூங்குடி கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் சிக்கித் தவித்து வருகின்றனர்.


இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்வதற்காக பூங்குடி கிராமத்தில் முகாமிட்டனர். இங்கு தங்கி தங்களது வியாபாரத்தை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது வியாபாரம் பாதித்துள்ளது. அதோடு தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கும் ரயில் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பாஜக சார்பில் "மோடி கிச்சன்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஆதி த சர்க்காரம் அமைப்புடன் இணைந்து தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் காலை மதியம் இரு வேளை வழங்கப்பட்டு வருகிறது. நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, விழி இழந்தோர் பள்ளி, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த இரு வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக பூங்குடி கிராமத்தில் சிக்கியுள்ள வடமாநில ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இன்று பாஜக மாவட்ட துணை தலைவர் அழகேசன், மாநில பொதுச் செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகளை 60 குடும்பத்தினருக்கும் வழங்கினர். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: அழகேசன். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர்.

0 comments: