Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பிச்சாண்டவர் கோவில் பகுதியில் இன்று நடந்தது. 


இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலை, முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூரண மதுவிலக்கு என்பது உலக அளவில் தோல்வியடைந்த விஷயமாகும். 



  அமெரிக்காவிலும் இது தோல்வியை சந்தித்துள்ளது. ஈரானிலும் பூரண மதுவிலக்கு சாத்தியப்படவில்லை. குஜராத்திலும் ஏட்டளவில் தான் பூரண மதுவிலக்கு இருக்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மாபியாக்கள் தலை தூக்கி விடுவார்கள். கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும்.


  டாஸ்மாக் மதுபானக்கடைகளை கடந்த 45 நாட்களாக பூட்டி இருக்கவே கூடாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் அதாவது 11 மணி முதல் 1 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் ஆரம்பத்திலிருந்தே ஆன்லைன் மூலமும் மது விற்பனை செய்திருக்க வேண்டும். 


 அதனால் எதிர்வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மது விற்பனையை தொடர வேண்டும். அதேபோல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் மது விற்பனை செய்யவேண்டும்.  கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்காலத்தில் ஆன்லைனில் மது வாங்கும் முறையை கற்றுக் கொள்வார்கள். 

   அது மிகவும் எளிது. தற்போது ரயிலுக்கு கூட அனைவரும் ஆன்லைன் மூலமே டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். தற்போது சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை, நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார்களின் அடிப்படையில் தான் நீதிமன்றம் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. 

  கொரோனா பிரச்சனை காரணமாக எந்த தேர்தலும் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. தற்போது செய்வது போல் சமூக இடைவெளியுடன் தள்ளி தள்ளி நின்று ஓட்டு போட்டு இந்த அரசை வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்.

0 comments: