Monday, August 16, 2021

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்


ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள்  தேசிய கொடி ஏற்றி வைத்து


பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும்  பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2021)   சுதந்திர தின விழா இவ்விழாவில்  ஆணையர்  திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

  மாநகராட்சியில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரானா (covid - 19) நோய் தடுப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்த 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.  

 

  ஆதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  மாசற்ற முறையில் 25 ஆண்டுகள்  பணி புரிந்து நிறைவு செய்த 12 பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும்  பாராட்டு சான்றிதழ்கள் ஆணையர்  அவர்கள் வழங்கினார்.  


        பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய  பிறகு  காந்தி சந்தைஅருகில்  போர் வீரர்கள் நினைவு  தூணிற்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

       

          மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் திருமதி. எஸ் . அமுதவள்ளி,   , நகர் நல அலுவலர் திருமதி. மரு. எம்.யாழினி , செயற்பொறியாளர்கள் திரு.பி.சிவபாதம், திரு.ஜி.குமரேசன், உதவிஆணையர்கள் திரு.ச.நா.சண்முகம், திரு.எம்.தயாநிதி, திரு.எஸ்.திருஞானம், திரு.சு.ப.கமலக்கண்ணன்,                         திரு.எஸ், செல்வபாலாஜி  மற்றும்  உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள்,  பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

0 comments: