Monday, August 16, 2021

 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவாரசு  தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


     இந்திய திருநாடனாது விடுதலை பெற்று இன்று 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொடியேற்றி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது.


அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் காலை 09:05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர்‌ அணிவகுப்பின் படை தளபதியுடன் வாகனத்தில் பயணித்து. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர்‌ மூவர்ணக் கலர் கொண்ட‌ பலூன்களை வானில் பறக்கவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 323 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன்,மாநகர காவல் ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: