Monday, August 09, 2021

 பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் நடைபெற்றது. 


பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்தார். 


இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. ம. சுப்ரமணியன் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரால் இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். சிவராசு அவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியை இது போன்ற பொன்னான காரணத்திற்காக கொரோனா தடுப்பூசியினை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க தங்கள் சிஎஸ்ஆர் நிதியை தாராளமாக முன்வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.


நிறுவனங்கள் அளிக்கும் நிதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு எஸ் சிவராசு அவர்கள் பெற்றுக்கொண்டு அவர் மூலமாக அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் செலுத்தப்பட்டு பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை பொது மேலாளர் திரு. சாமுவேல் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

0 comments: