Wednesday, September 17, 2014
திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சித்ரா. இவருக்கு 16 ஆவது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது.
10 குழந்தைகள்:
இவர்களுக்கு 4 மகன்கள், 6 மகள்கள் என மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பம்:
இந்நிலையில் 11 ஆவது முறையாக சித்ரா கர்ப்பமானார். ஆனால் கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்தான உணவுகள் எதுவும் உட்கொள்ளவில்லை.
வயிற்றில் இறந்த குழந்தை:
இதனால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. இது தெரியாமல் சித்ரா வீட்டில் எப்போதும் போல் வேலை பார்த்து வந்தார்.
பிரசவ வலி என்று சந்தேகம்:
சம்பவத்தன்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டது. பிரசவ வலி வந்துள்ளதாக நினைத்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாயும் பரிதாப பலி:
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தை வெளிவந்தவுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்மதிக்காத கணவர்:
சித்ரா குடும்ப கட்டுப்பாடு செய்ய தயாராக இருந்தபோதிலும் அவரது கணவர் இதற்கு சம்மதிக்கவில்லை.
கணவருக்காவது செய்திருக்கலாம்:
இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் மணிகண்டனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருப்போம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
சோகத்தில் கிராம மக்கள்:
நாகரீகம் வளர்ந்த இந்த காலத்திலும் 35 வயதில் 10 குழந்தைகளை பெற்ற பெண் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்:திருப்பூரில் டிசம்பர் இறுதிக்குள் வியாபார கடைகள் மற்றும்
வீடுகளை நைஜீரியர்கள் காலி செய்யவேண்டும் என திருப்பூர் செகண்ட்ஸ் பனியன்
உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் நேற்று நடந்த செயற்குழுவில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் அசோசியேஷன்
சார்பில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூரில்
நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார்.
தலைவர் சுந்தரம், துணை தலைவர் குமார், பொருளாளர் கந்தசாமி, துணை செயலாளர்
சித்திக், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், திருப்பூரில்
வசிக்கும் நைஜீரியர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. எனவே டிசம்பர்
இறுதிக்குள் நைஜீரியர்கள் வியாபார கடைகள், வீடுகள் மற்றும் கம்பெனிகளை காலி
செய்ய வேண்டும், நைஜீரியர்கள் பனியன் துணிகளை வாங்கி செல்லுவது மட்டுமே
நடைபெற வேண்டும், மேலும் கடந்த ஆண்டு காதர் பேட்டையில் கடைகளை காலி செய்து
விட்டு சரக்குகளை வாங்கி செல்லும் வர்த்தகர்களாக வந்து செல்லுவதாக
உறுதியளித்து நைஜீரியர்கள் கடைகளை காலி செய்தனர். அதன் பிறகு புதிதாக வந்த
நைஜீரியர்கள் மீண்டும் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். மாநகராட்சி உரிய
நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு நடக்காவிடில்,
காதர் பேட்டை வியாபாரிகள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும்
கடையடைப்பு நடத்தப்படும், தற்போது காதர் பேட்டைக்குள் சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளது. சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், தார்சாலைகள், மின் விளக்கு
சரி செய்யப்படாமலும் உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனதிருப்பூர், : திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தலைமறைவானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக் டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (52). இவர், தனது குடும்பத்துடன் திருப்பூர் பாளையக்காடு, சஞ்சய் நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், தனது மனைவி பரிமளா பெயரில், கடந்த 15 வருடங்களாக பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை வாரம், மாதம் என பணத்தை வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில், அப்பகுதியில் உள்ள கோல் டன் நகர், சஞ்சய் நகர், சூர்யா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் இரு ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் ஏலச்சீட்டு மூலமாக பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஏலச்சீட்டு முடிவடைந்து, பலநாட்களாகியும் பாலசுப்ரமணி பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்கும் போதெல்லாம் ஒரு மாதத்தில் தந்து விடுவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வீட்டைகாலி செய்து விட்டு பாலசுப்ரமணி தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து, ஏலச் சீட்டு நடத்தி மோ சடியில் ஈடுபட்டு தலைமறைவான பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கொளத்துரை சேர்ந்தவர் மேகலா. மேகலா மாடு வளர்ந்து வருகிறார். கடந்த மாதம் நிறைமாதமாக கர்ப்பிணியாக இருந்த பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்று அதிசயமாக மூன்று கண்களுடன் பிறந்தது. இதனையடுத்து இதுதொடர்பான தகவல் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது. இதனையடுத்து அப்பகுதிவாசிகள் விரைந்து வந்து கன்றுகுட்டியை பார்த்து செல்கின்றனர். கன்றுகுட்டி நெற்றிக் கண் உள்ளிட்ட மூன்று கண்களுடன் உள்ளதால் அதனை இந்து கடவுள் சிவனின் அவதாரம் என்று கருதி மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
சிவனின் அவதாரமக கருதப்படும் அந்த கன்றுவுக்கு அப்பகுதி மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். கன்றுகுட்டியின் படம் அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்துவந்து சில சிவன் அவதாரமாக கருதப்படும் கன்றுவை வழிபாடு செய்து வருகின்றனர். "நாம் இந்த கன்று வழிபாட்டால் கிராம மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறோம்." என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஷர்மிளா என்ற இளம்பெண் கூறுகையில், இந்த கன்று மூன்று கண்களுடன் பிறந்துள்ளது. எனவே நாங்கள் கன்றுவை இந்து கடவுள் சிவன் என்று நம்புகிறோம். கடவுள் சிவனுக்கும் மூன்று கண்கள், அவர் இங்கே பிறந்துள்ளார் என்று நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளார். இது எங்களுடைய கடவுள் என்பதினாலே நாங்கள் பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து கன்றுவை வழிபாடு செய்கிறோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி வேலுசாமி, சிணசாமி, சி.பி.வசந்தமணி, கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் ச
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு ஆதரவாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனநதன் தலைமையில் அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் இரு சக்கர வாகன பேரணியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடினர். திருப்பூர் பார்க் ரோடு எம்.ஜி. ஆர் சிலை அருகில் துவங்கிய இந்த பேரணியை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து இரு சக்கர வாகனத்தில் சென்றார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வேட்பாளர் எம்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பேரணியில் வாகனம் ஒட்டி சென்றனர். திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதி, புதுமார்க்கட் வீதி, காமராஜர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இந்த பேரணி சென்றது. இதில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெ
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...



