Sunday, September 21, 2014
உடுமலை அருகே உள்ள ஸ்ரீராம் நகர் நகரைச்சேர்ந்தவர் கனகராஜ். இவர் உடுமலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார். அவரது மனைவி மகேஸ்வரி கீழ் வீட்டில் அறையில் தூங்கினார். இரவு வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாலை 3.45 மணியளவில் மகேஸ்வரி படுத்திருந்த படுக்கை அறையில் ஏதோ சத்தம் கேட்டதும் அவர் எழுந்துள்ளார். அப்போது அங்கு பீரோ பக்கத்தில் யாரோ மர்ம நபர் நின்று கொண்டிருந்தார். உடனே மகேஸ்வரி யாரது என்று சத்தம் போட்டதும் அந்த நபர் வேகமாக பின்புறக்கதவு வழியாக தப்பிச்சென்றுள்ளார். அதன் பின்பு மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 5¼ பவுன் செயினை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும். இது குறித்து மகேஸ்வரி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டாக ஓமியோபதி டாக்டர் இல்லாததால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில் ஓமியோபதி பிரிவில் சிறுநீரக கல், பித்தப்பை கல், ஆஸ்துமா, மூட்டு வாதம், தோல் நோய், மூலம், வயிற்றுப்புண், காது, மூக்கு, தொண்டை பாதிப்பு, கர்ப்பப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தினமும் 100–க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓமியோபதி சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இங்கு ஓமியோபதி டாக்டராக இருந்த கிங், கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின், இதுவரை தனியாக டாக்டர் நியமிக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு டாக்டர், வாரத்தில் 2 நாட்கள் திருப்பூர் வந்து சிகிச்சை அளித்து வருகிறார். அவர் வரும் நாட்களில் மட்டுமே, நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில், ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஓமியோபதி சிகிச்சை பிரிவில் உள்ள மருந்தாளுநர்கள், டாக்டர் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரையை மட்டும் வழங்குகின்றனர். புதிதாக ஓமியோபதி சிகிச்சை பெற வரும் நோயாளிகளை டாக்டர் உள்ள நாட்களில் வருமாறு கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அவர்கள் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சையை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வெகுதொலைவில் இருந்து வருபவர்களுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வந்து செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் புதிதாக வரும் நோயாளிகள், டாக்டர் வரும் நாள் தெரியாமல் இங்கு மருத்துவமனை வரை வந்து விட்டு பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே நோயாளிகளின் வீண்அலைச்சலை தவிர்க்கவும், அவர்கள் தேவையான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும் திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் ஓமியோபதி டாக்டர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மலையத்தாபாளையம் சீனிவாச நகரை சேர்ந்தவர் மாதப்பகவுண்டர் (வயது 55). பால் வியாபாரியான இவர் பொருளாதார நிலையை மேம்படுத்த கால்நடைகளை வளர்த்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டுத்தோட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட மிளகாய் நாற்றுகள் நன்கு மிளகாய் செடிகளாக வளர்ந்துள்ளன. இதில் ஒரு மிளகாய் செடியில் அதிசயமாக பச்சை மிளகாய்கள் மேல்நோக்கி காய்த்துள்ளன. இதுபற்றி விவசாயி மாதப்பகவுண்டர் கூறியதாவது:– பொதுவாக மிளகாய் செடிகளில் மிளகாய்கள் சிறிய பிஞ்சில் இருந்து காம்புகள் மேலேயும் கூம்பு வடிவ விதைப்பகுதிகள் கீழேயும் உள்ளது போல் காய்க்கும். ஆனால் இந்த மிளகாய் செடியில் பச்சை மிளகாயின் விதைப்பகுதிகள் மேல்நோக்கி காய்த்துள்ளன. இதற்கு முன்பு இதுவரை மிளகாய் செடிகளில் பச்சை மிளகாய்கள் மேல் நோக்கி காய்த்துள்ளதை கேள்விப்பட்டதுமில்லை, கண்டதுமில்லை. ஆனால் தற்போது எனது வீட்டில் வித்தியாசமான முறையில் அதிசயமாக பச்சை மிளகாய்கள் மேல்நோக்கி காய்த்துள்ளது. இது எங்களது குடும்பத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 18–ந்தேதி நடைபெற்றது. இதற்காக குண்டடம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளும், தாராபுரம் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர். குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மொத்தம் 26 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17 ஆயிரத்து 544 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இது 65 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
56 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குகள் எண்ணுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
நாமக்கல் ராமநாதபுரம் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது32), இவர் நாமக்கல்லில் இருந்து பொள்ளாச்சி சந்தைக்கு 32 எருமை மாடுகளை ஒரு லாரியில் ஏற்றி சென்றார். திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் அருகே லாரி வந்தபோது திருப்பூர் பசுக்கள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் அந்த லாரியை மடக்கிப்பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 32 மாடுகளையும், அதை ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்ததுடன் அதை ஓட்டி வந்த மணிகண்டன் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Saturday, September 20, 2014
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது . தலைமை S .ராஜேந்திரன் . மாவட்ட தலைவர் , R .சந்திரசேகர் ,மாநில துணை தலைவர் , தங்கராஜ் ,மாவட்ட செயலாளர் , வேல்சாமி ,மாவட்ட பொருளாளர் , சித்திரவேல் ,மாநில இணை செயலாளர் . இதில் சிறப்பு விருந்தினராக எழுச்சியுரை . வணிகர்களின் காவலர் சுதேசி நாயகன் மாநில தலைவர் . த .வெள்ளையன் .அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார் .விழா பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
தொழிலாளர் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி
வாகனப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு முடிவு
திருப்பூர், செப்.20-
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சூழலில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய போனஸ் தொகையை அதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வலியுறுத்தி வாகனப் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் நடத்த இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனியன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி.குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்க இருப்பதால் பனியன், விசைத்தறி, சலவை, சுமைப்பணி, கட்டுமானம், இன்ஜினியரிங், கைத்தறி மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் பண்டிகைக்கு 15 தினங்களுக்கு முன்பே உரிய போனஸ் தொகையை வழங்க வேண்டும் என அனைத்து தொழில் சார்ந்த முதலாளிகளையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது.
அதேசமயம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மையங்களில் அக்டோபர் 6ம் தேதி வாகனப் பிரச்சாரம் செய்வது என்றும், அக்டோபர் 7ம் தேதி திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் சிஐடியு முடிவு செய்துள்ளது.
போனஸ் என்பது தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமை என்பதால் அதை உரிய காலத்தில் கேட்டுப் பெற தொழிலாளர்கள் முன்வர வேண்டும். சிஐடியு நடத்தும் போனஸ் தொடர்பான ஆர்ப்பாட்ட இயக்கத்தில் அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...









