Monday, September 22, 2014
மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:-
“இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. தற்போது மீனவர் பிரச்னை அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது.
காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு இருந்தபோது மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீனவர்கள் பிடிபட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், தமிழகத்தில் புத்த பிட்சுகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பின்னர்தான், மீனவர்கள் விடுதலையில் தாமதம் ஏற்பட்டது.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், 100 நாளில் மீனவர்கள் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால், இன்னும் தீர்வு காணப்படவில்லை.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது வேதனைக்குரியது. மீனவர் பிரச்னையில் தமிழக பாஜகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆளுக்கொரு கருத்தைச் சொல்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நேரடியாகப் பேசி, மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்னை இரு நாடுகள் சம்பந்தப்பட்டதாகும். ஆனால், இங்குள்ள சில கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் இந்தப் பிரச்னையை கையில் எடுத்து மக்களைத் திசை திருப்புகின்றன. இலங்கைப் பிரச்னை தீர்ந்து விட்டால், பல கட்சிகளுக்கு அரசியல் நடத்த முடியாமல் போய்விடும்.
13 ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கருத்து. இதைத்தான் ஆட்சியில் இருந்தபோது வலியுறுத்தினோம்“ இவ்வாறு கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ள செல்லும் குடிமக்களை தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், சிரியாவின் ஒரு பகுதியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ளனர். இதனால் அண்டை நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து போர் புரிவதற்கு பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதிகள் ஈராக் சிரியாவிற்கு செல்கின்றனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர். இதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ள செல்லும் குடிமக்களை தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
செய்தி ஊடகங்களின் தகவல் படி இந்த புதிய சட்டம் புதன்கிழமை செனட் சபையில் அறிமுகபடுத்தப்பட்டது. இந்த சட்டப்படி ஆஸ்திரேலிய குடிமகன் செய்யும் போது அந்த அரசாங்கத்தால் போகக் கூடாத பகுதிக்கு செல்வது சட்டபடி குற்றமாகும் என கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 18–ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 859 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி 638 வாக்குகள் பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் மல்லிகா 108 வாக்குகளும், மார்க்சிஸ்டு (சி.பி.எம்.) வேட்பாளர் சாந்தாமணி 78 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் சந்திரா 35 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
530 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் ப.நாராயணன் மற்றும் தேர்தல் பார்வையாளர் ராஜவேலு வெற்றி சான்றிதழ் வழங்கினர். அ.தி.மு.க. வேட்பாளர் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
அவினாசி புதிய பஸ் நிலையத்தில் அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் (வழித்தட எண் 32) டி.என்.38எண்1462 என்ற அரசு பஸ்சில் பொதுமக்கள், கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பலர் ஏறினர். கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வந்தார்.
அவினாசியில் இருந்து திருப்பூர் செல்வதற்கு 8 ரூபாய் டிக்கெட்டை பயணிகளுக்கு கொடுத்துள்ளார். இதில் சில பயணிகள் கூடுதலாக பயணக்கட்டணம் கேட்பதாக கூறி சீட்டை வாங்க மறுத்தனர். அவினாசியில் இருந்து திருப்பூர் செல்ல கட்டணம் 5 ரூபாய் மட்டும்தானே, எதற்காக அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என கண்டக்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே பயணிகள் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘இவ்வழியே இயங்கும் அனைத்து பஸ்களும் சாதாரண பஸ்களே. எனவே சாதாரண கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தினர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக் கின்றனர்.
இவர்கள் கேட்கும் கட்ட ணத்திற்கான ஆணை எதையும் அரசு வழங்கவில்லை. இதை அறியாமல் பயணிகள் ஏமாந்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து, தகவலை பெற்று போக்குவரத்து நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவே அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் சம்பவ இடம் வந்து அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளை சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பன் 2482 ஓட்டு வித்தியாசத்திலும், 22-வது வார்டில் கலைமகள் கோபால்சாமி 1810 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்டனர். திருமுருகன் பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பழனிசாமி 5742 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர் ஆகியோர் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், மேயர் அ.விசாலாட்சி , அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி , துணை மேயர் சு.குணசேகரன், முன்னிலையில் திருப்பூர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, பூண்டி விஸ்வநாதன், ஸ்டீபன் ராஜ், கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர் சாமிநாதன், கவுன்சிலர்கள் கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி, வேலம்பாளையம் அய்யாசாமி, கண்ணப்பன், பேபி தர்மலிங்கம், கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு தன், வேலுமணி, நீதிராஜன், மதுரபாரதி, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பன் 2482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்ட அவருக்கு மாநகர தேர்தல் அலுவலர், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அசோகன் சான்றிதழ் வழங்கினார். வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், மேயர் அ.விசாலாட்சி , துணை மேயர் சு.குணசேகரன், முன்னிலையில் சான்றிதழை கவுன்சிலர் கண்ணப்பன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர் சாமிநாதன், கவுன்சிலர்கள் கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி, கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி 1810 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்ட அவருக்கு மாநகர தேர்தல் அலுவலர், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அசோகன் சான்றிதழ் வழங்கினார். வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், மேயர் அ.விசாலாட்சி , துணை மேயர் சு.குணசேகரன், முன்னிலையில் சான்றிதழை கவுன்சிலர் கலைமகள் கோபால்சாமி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர் சாமிநாதன், கவுன்சிலர்கள் கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி, கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு
திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று திருமூர்த்தி குப்பாண்டம்பாளையம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் திருமூர்த்தியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த திருமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள் பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொங்கலூர் பகுதியில் 2-ஆம் மண்டலத்திற்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது. பெத்தாம்பாளையம் பிரதான வாய்க்காலில் இருந்து தண்ணீர், பெருந்தொழுவு பகுதி பாசனத்திற்கு பின்னர் விஜயாபுரம், கவுண்டன்பாளையம் பகுதிக்கு விட வேண்டும். அதன்படி திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 மணி நேரம் மட்டுமே விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டதாம்.
இதனால் ஆவேசமடைந்த விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள், பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த பிஏபி உதவிப் பொறியாளர் சிங்காரவேலு, அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் வினோத் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
