Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரையில் 3 பேர் கொலை: பழிக்குப்பழி வாங்க பதுங்கி இருந்த 4 பேர் கைதுமதுரையில் ஜெய்ஹிந்துபுரம், மீனாம்பிகை நகர் பகுதியில் கடந்த 19–ந் தேதி வீட்டிற்குள் புகுந்து சகோதரர்களான கருப்புராஜ் (வயது 21), பாம்பு நாகராஜ் (19), இவர்களை பார்க்க வந்த நண்பர் கார்த்திக்(21) ஆகிய 3 பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட பழி வாங்கும் போட்டியில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் குண்டுமணி, பிரேம், சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன், அலெக்ஸ், மொட்டை மணி, எஸ்.மணி, சுடலைமுத்து, சித்திரைவேல் பாண்டியன் ஆகியோர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையில் நண்பர் பாம்பு நாகராஜை கொலை செய்தவர்களை பழிக்குப் பழியாக கொலை செய்ய ஒரு கும்பல் திருப்பரங்குன்றம் சந்திரபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஹார்வி பட்டியைச் சேர்ந்த இளவரசன் (23), பழங்கா நத்தம் பிரபு (21), ஜெய்ஹிந்து புரம் மருது பாண்டியன் (23), பழையனூர் பாண்டி வேல் (23) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
தாது மணல் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு மனித உரிமை தலைவர் வலியுறுத்தல்
தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல் மற்றும் கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் சட்ட விரோதமாக கிரானைட் தொழில் மூலம் நடத்தப்பட்ட முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 90 குற்ற வழக்குகளில் 50–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, வெள்ளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல ஆறுகள் மணல் கொள்ளையர்களால் நாசமாக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 55 ஆயிரம் லாரிகளில் ஆற்று மணல் எடுக்கப்படுகிறது.
கேரளா, கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்க தடை உள்ளதால் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல், கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் கீழ் சிறப்பு குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு திறம்பட செயல்பட உரிய கால அவகாசம், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன், அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
Displaying scan.jpgDisplaying scan 001.jpg
சமூகத்தின் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படவேண்டியவர்கள் முதியவர்கள் ஆனால்  காவல் துறையினரின் அலட்சியத்தால் கண்ணீரோடு உயிருக்கு போராடி வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  பகுதியை சேர்ந்த  அழகம்மாள் என்கின்ற 75 வயது  மூதாட்டி.
 
              கணவர் சேர்த்து வைத்த சொத்தில் கம்பீரமாக  வாழ வேண்டிய இவர் ,தனது பேரன்கள் என்ற பெயரில் உள்ள கயவர்களால் தினம் தினம் சித்திரவதை செய்யப்படுவதோடு,  அந்த கொடூரர்களின் வெறியால் அந்த மூதாட்டியின் காதினை அறுத்து நகைகளை பறித்து கொண்டதோடு சித்திரவதையின் உச்சகட்டமாக அந்த மூதாட்டியை நிர்வாணப்படுத்தி தங்களது  சொத்து  வெறியின் உச்சத்தை அரங்கேற்றி  வருகின்றனர். 

                        பரிதாபத்திற்குரிய அழகம்மாளின் கணவர் பெயர் சுப்பிரமணியன் .கணவரின் மரணத்திற்கு பிறகு அவரது சம்பாத்தியத்தில் உருவாக்கிய சொந்த வீட்டில் சித்தையன் கோட்டை நாகப்பன் தெரு பகுதியில் வசித்து வருகிறார். அவர்களுக்கு  
மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் என மொத்தம் 5 பேர் இதில் மூத்த மகன் பழனிச்சாமி என்பவர் இறந்துவிட்டார்  அவரது மகன்கள் அழகர் சாமி, முருகவேல், சுப்பையா மற்றும்  மகள்கள் பொம்மி, குட்டியம்மாள்.ஆகிய 5 நபர்களும் சேர்ந்து கொண்டு அழகம்மாள் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியோடு அவருக்குரிய வீட்டிலேயே  வசித்துக் கொண்டும் அவர்களுக்குரிய நில புலன்களை அனுபவித்து கொண்டும்.ஊதாரித்தனமாக வாழ்க்கையை நடத்தி  வருகின்றனர். 

              இந்த வயதிலும் சுயமாக சமைத்து சாப்பிடும் இந்த மூதாட்டியிடம் இருந்து  சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு அவரை அடித்து தினமும் கொடுமைப் படுத்துவதோடு  அந்நிய வீட்டாரோடு  பேசக்கூட முடியாதபடி வாய்ப்பூட்டு சட்டம்  போடுவதோடு  குடித்துவிட்டு வந்து  அந்த பாட்டி  வசிக்கும் வீட்டில் அத்து  மீறி நுழைந்து கண்மூடிதனமாக தாக்குகின்றனர் 

இதனால் மனம் உடைந்த அழகம்மாள் தனது இளைய மகன் அறிவகம்  மூலமாக செம்பட்டி காவல்  நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பாலகுமார் விசாரித்து சம்பந்தப்பட்ட  நபர்கள் மீது 147,148,447,314,427,506(1)     ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த  கையோடு எப் ஐ ஆர் ன் மீது  மேல் நடவடிக்கை எதுவும் எடுத்திடாமல் கிடப்பில் போட்டுள்ளனர் 

இதுகுறித்து கேட்க சென்றால் நான் அவர்களை கூப்பிட்டு கண்டித்து விட்டேன் ,உங்களது பேரன் தானே ,வெளியில் பேசி தீர்த்து  கொள்ளலாம் என கட்ட பஞ்சாயத்து கார தொனியில் காவல்துறை அதிகாரிகளே பேசி வருகின்றனர் .இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படாதது ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது 

இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தையும்,காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரை தள்ளாத வயதிலும் நேரில் சென்று மனு அளித்து விட்ட போதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மது அருந்தி விட்டு எப்போதும் போல் வெளியில் திரிவது சட்டத்தை கேலிக் கூத்தாக்குகிறது.உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையாவது காவல்துறையினர் செய்ய வேண்டாமா ?குடும்ப பிரச்னை என ஒதுங்கினால் நாளை மூதாட்டி உயிர் போன பிறகு கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பார்களா இவர்கள் ?

                        பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தமிழகத்தில் தான் குறைந்துள்ளது என்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றுக்கே சவால் விடக்கூடிய வகையில் செயல்படும் முதியோர் வதை செய்யும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே அழகம்மாள் மூதாட்டியின் கடைசி மூச்சாக உள்ளது
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
Displaying news 3 kumbhabishekam.jpgசோழவந்தான் பூமேட்டு தெருவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. கும்பாபிஷேகத்திற்காக எம்விஎம் மணி (எ) முத்தையா குடும்பத்தாரால் இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயிலிலுள்ள உச்சிமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைதொடர்ந்து அன்னதானாம் நடைபெற்றது.ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் மணி (எ) முத்தையா, வள்ளிமயில், எம்விஎம் கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
னர்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை  தல்லாகுளம் பகுதியில் உள்ள பத்மா மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளை வளர்க்கும் விதம் குறித்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது .இதில் டாக்டர்கள் சுந்தர பாண்டியன் ,பிரசன்னா கார்த்திக் ஆகியோர் பெற்றோர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பங்கேற்றனர் ர்.Displaying news 2 doctar.JPG
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை ஆலவாய் லயன்ஸ் சங்கம் மற்றும்  தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பெண்களுக்கான இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம் மதுரை போஸ் மருத்துவமனையில்  நடைபெற்றது.திருமதி ஜெயந்தி செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.இதில் ஆலவாய் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மதி,டாக்டர்கள் பாண்டியராஜன்,கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Displaying DSC_0731.JPG
On Thursday, September 25, 2014 by farook press in ,    
திருப்பூர், செப்.25-
திருப்பூர் மாநகராட்சி 22 மற்றும் 45 வது வார்டு அண்ணா தி.மு.க.கவுன்சிலர்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட  அண்ணா தி.மு.,க. வேட்பாளர்கள் கலைமகள் எம்.கோபால்சாமி, 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  வேட்பாளர் எம்.கண்ணப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் எந்த கட்சிகளுக்கும் இடம் தராமல் போட்டியிட்ட அனைத்து அண்ணா தி.மு.க.வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.தற்போது திருப்பூர் மாநகராட்சியில் 50 அண்ணா தி.மு.க.மாமன்ற உறுப்பினர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.கடந்த 2 1/2 ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.330 கோடியை சிறப்பு நிதியாக அளித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மக்கள்பணி செய்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாத்துகிறேன்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து மேயர் அ.விசாலாட்சி பேசியதாவது:​-
2008 ஆம் ஆண்டு பெயர் அளவில் அறிவிப்புடன் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றாத நிலையில் 2011 ம் ஆண்டு முன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா 2 நகராட்சிகள், 8 ஊராட்சிகளை இணைத்து 60 வார்டுகளாக உருவாக்கி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் 60 வார்டுகளுக்கும் சமநிலையாக நிதிகளை ஒதுக்கீடு செய்து இதுவரை 330 கோடிக்கும் மேல் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.தாய் உள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் மீண்டும் திருப்பூர் மாநகராட்சிக்கு நிதிகளை அள்ளி தர இருக்கிறார். அண்ணா தி.மு.க.வேட்பாளராக போட்டியிட்ட எம்.கண்ணப்பன், கலைமகள் கோபால்சாமி ஆகியோர்களின் வெற்றிக்கு இரவு பகல் பாராது வேறாக, விழுதாக இருந்து உழைத்த கழக தொண்டர்களுக்கும், அவர்களுக்கு வாக்குகளை அளித்த்ந்து மகத்தான வெற்றியை தந்த வாக்காள பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு மேயர் அ .விசாலாட்சி பேசினார்.முன்னதாக ஆணையாளர் மா.அசோகன் முன்னிலை வகித்து பேசினார்.துணை மேயர் சு.குணசேகரன் வாழ்த்தி பேசினார்.
விழாவில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, வசந்தாமணி, பிரியா சக்திவேல், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம்,விஜயகுமார்,  அண்ணா தி,முக.பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


 திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அண்ணா தி.மு.க.உறுப்பினர் பி.கே.ராஜீ, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அவருக்கு தலைவர் வி.எம்.சண்முகம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அருகில் தாராபுரம் எம்.எல்.ஏ.பொன்னுசாமி, துணைத்தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் தண்ணீர்பந்தல் ப.நடராஜ், எஸ்.எம்.பழனிசாமி உள்ளிட்டவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

On Thursday, September 25, 2014 by farook press in ,    






Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் : ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கையை, மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்ற எதிர்பார்ப்புடன், திருப்பூர் தொழில் துறையினர் உள்ளனர்.

ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வர்த்தகத்துறை அமைச்சகம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய வெளியுறவு வர்த்தக கொள்கையை (எப்.டி.பி.,) வெளியிடுகிறது. இதில், ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான பல்வேறு அம்சங்கள் இடம் பெறும்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் (போக்கஸ் லிங்டு மார்க்கெட்) ஆடை ஏற்றுமதிக்கு இரண்டு சதவீத ஊக்கத்தொகை; புதிய நாடுகளுக்கு இடையிலான (போக்கஸ் மார்க்கெட்) ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மூன்று சதவீத சலுகை; ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மதிப்பை கணக்கிட்டு, கூடுதல் ஏற்றுமதி மதிப்பில் இரு சதவீதத்துக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, ஜவுளி கொள்கைக்கான திட்ட வரைவுகளை தயாரித்து, இறுதி கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கடந்த 2009ல் வெளியிடப்பட்ட வெளியுறவு வர்த்தக கொள்கை அவகாசம் நிறைவடையும் நிலையில், பல்வேறு சலுகைகள் வழங்கும் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கை எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது: மத்திய அரசின் வெளியுறவு வர்த்தக கொள்கையில், ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இடம் பெறும். இக்கொள்கையில், 124 புதிய நாடுகளுடனான ஏற்றுமதிக்கு மூன்று சதவீதம்; 24 சிறப்பு புதிய நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு நான்கு சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதை ஒருங்கிணைந்து, ஒட்டுமொத்தமாக, புதிய நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கு வழங்கும் ஊக்கத்தொகையை, கொள்கை நிறைவடையும் காலம் வரை வழங்கவேண்டும்.அதேபோல், ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் நிறுவனங்களுக்கு மதிப்பு வழங்கி, அதன் அடிப்படையில் ஒரு சதவீத "ஸ்கிரிப்' வழங்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது; அதை மீண்டும் அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை, வர்த்தகத்துறை அமைச்சர் 
நிர்மலா சீத்தாராமனிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.