Monday, September 29, 2014
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். அதன்மூலம் மறுதீர்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த தீர்ப்பு குறித்து புதிய கருத்து கூற விரும்பவில்லை. இந்த தண்டனை மூலம் அவர் அரசியலில் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்டனை மூலம் கர்நாடகா, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு போட்டது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ அல்ல. சுப்பிரமணியசாமி.
தீர்ப்பு கூறியதுதான் கர்நாடக நீதிபதி. அ.தி.மு.க.வினர் தலைமை மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். ஆனால் நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது. புதியதாக பொறுப்பு ஏற்கும் முதல்–அமைச்சர் தமிழகத்தில் உள்ள வறட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் மார்ச் மாதம் 25 முதல் 29–ந்தேதி வரை நடக்கிறது.
வருகிற 6–ந்தேதி விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற இருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 16–ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடியில் தீயனைப்பு நிலையம் அருகில் உள்ள காமராஜரின் மார்பளவு சிலையை நேற்று இரவு வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி காமராஜருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை எங்களது பெருந்தலைவர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
காவல் துறையினர் இந்த கும்பலை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்டுள்ள காமராஜரின் சிலையை அகற்றி விட்டு அதே இடத்தில் முழு அளவு வெண்கல சிலையை அரசு வைத்து தர வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியாக இழப்புக்கு உள்ளாகும். இது தண்டனைக் காலத்திற்கு பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013ல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப்படியான விளைவு ஆகும்.
இதற்கு முன் நாடாளு மன்றத்தில் பதவிகளில் இருந்த நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத்தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 2013க்கு முன்பு இருந்த நிலை வேறு. முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ் முதல் நிகழ்வு இந்திய அரசியலில்.
அ.தி.மு.க. போதிய பெரும்பான்மையும், கட்டுக் கோப்புடனும் உள்ள ஆளுங்கட்சியாக இருக்கிற காரணத்தாலும் அ.தி.மு.க.வின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் ஜெயலலிதா இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சட்டமன்ற கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளனர். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளூநர் ரோசய்யாவை சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச்சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.
அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அவர் ஏற்கனவே ஒரு முறை இப்பதவியில் அமர்ந்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத்திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது. ஜனநாயகத்தில் ஏதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் இரண்டாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஆவது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது. அவரது தலைமையில் அமைந்து புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க்கட்சிகளையும் மதித்து தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.
புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன.
ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார்.
2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார்.
தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.

சென்னை, செப். 29–
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது.
பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரா ன், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உடுமலை கிருஷ்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன், ரவிகுமார்,சிவகுமார், கணேஷ், முருகன், முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன், ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் தீக்கனல் விஜயகுமார், பரதிதிபிரியன், பலகுரல் வெள்ளியங்கிரி, வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களு ம், தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
திருப்பூர் டவுன் பஸ்களில் விதிமுறைக்குப் புறம்பாக
அதிக கட்டணம் நிர்ணயித்து போக்குவரத்து அதிகாரிகள் முறைகேடு:
கட்டணத்தைக் குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்பூர், செப்.29-
திருப்பூர் நகர, புறநகரப் பேருந்துகளில் விதிமுறைக்குப் புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாமானிய மக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் கடிதம் எழுதியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் கடந்த 26 அன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் வட்டாரத்தில் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி,நம்பியூர், பெருமாநல்லூர், சேவூர், கருவலூர், கருமத்தப்பட்டி,சோமனூர், கொடுவாய் உள்ளிட்ட ஊர்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் இயக்கப்படும் 127 நகர, புறநகர பேருந்துகளில்எல்.எஸ்.எஸ் ஆக 120-ம், எக்ஸ்பிரஸாக 6ம், சாதாரணக்கட்டணத்தில் ஒரேயொரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டபபடி பெறப்பட்ட கடிதத்தில் 42பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு வகையினங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கொடுத்திருக்கும் பட்டியலில்எல்எஸ்எஸ் வகையினங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பேருந்துவழித்தடங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பட்டியலில்சாதாரணக் கட்டணப் பேருந்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்மூலம் மேற்படி 42 பேருந்துகள் விதிமுறைக்குப் புறம்பாககூடுதல் கட்டணப் பேருந்துகளாக இயக்கப்படுவது உறுதியாகிறது.
அதேபோல் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட கடிதத்தில், 137நகரப் பேருந்துகள் இயக்க அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் அவை எந்த வகையினத்தில்இயக்கப்படுகின்றன என்று எழுத்துப்பூர்வமாக பட்டியல் தரமறுத்துவிட்டார். அந்த நகரப் பேருந்துகளை சாதாரணக்கட்டணத்தில்தான் இயக்கப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.இதிலும் விதிமுறைக்குப் புறம்பாக எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ்பேருந்துகளை அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் இயக்குவது உறுதியாகிறது.
இது மட்டுமின்றி, அந்த எல்எஸ்எஸ்., எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கும் சட்டப்படி நிர்ணயித்துள்ள கட்டணங்களைவிட கூடுதல் கட்டணங்களை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தன்னிச்சையாக வசூலித்து வருகின்றனர். அரசாணைப்படி சாதாரண பேருந்துகளில் ரூ.3.00, எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் ரூ.3.50ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.4.50ம் என குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இரண்டு கி.மீ. தூரத்திற்கு ஒரு நிலை (ஸ்டேஜ்) என வரையறுத்து, ஒரே வீத கட்டணம்தான் வசூலிக்க வேண்டுமென்று அரசாணை சொல்கிறது.
ஆனால் திருப்பூரில் சாதாரண பேருந்து சேவை என்பதே நடைமுறையில் இல்லை. கிட்டத்தட்ட அனைத்துப் பேருந்துகளிலும் ரூ.4 வீதமும், அதிவிரைவுப் பேருந்துகளில் ரூ.5 வீதமும் குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், ஸ்டேஜ் நிர்ணயத்திலும் போக்குவரத்து துறை முறைகேடு செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.
மற்ற மாநகரங்கள், மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னையில் கூட குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.3ஆகத்ததான் உள்ளது. இங்கு மட்டும் கடும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதியிட்ட அரசுப்போக்குவரத்துக் கழகம் கோவை மண்டல அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி புதிய பேருந்து நிலையத்திற்கு எல்.எஸ்.எஸ் பேருந்தில் ரு.6.00ம், சாதாரண பேருந்தில் ரு.5.00ம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நடைமுறையில் எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் ரூ.8.00-ம்,எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரு.11.00-ம் வசூலிக்கப்படுகிறது.
முதல்வரின் தனிப்பிரிவிற்கு எமது கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவுக்கு பதில் அளித்துள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு அமலில் இருந்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் வேறெங்கும் இல்லாமல் திருப்பூரில் மட்டும் அரசாணை மற்றும் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வு செய்து பயணிகளின் நம்பிக்கைக்கு மோசடி செய்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறல் செய்துள்ளது தெரியவந்த நிலையில், கட்டண உயர்வைக் குறைத்து சீர்செய்வதற்கு மாறாக, சமாளித்து ஏமாற்றக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒரு அரசுத்துறையின் இத்தகைய அணுகுமுறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே பலவித நெருக்கடியில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் நடவடிக்கையாகவே போக்குவரத்து துறையின் செயல்பாடு அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான சாமானிய தொழிலாளர்கள் திருப்பூருக்கு வேலைநிமித்தமாக தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் இது போன்ற கட்டணச் சுரண்டலை ஏற்க முடியாது. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்கான விதிமுறைப்படி குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
(இத்துடன் கடிதம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி, மண்டல போக்குவரத்து அதிகாரி ஆகியோரிடம் பெறப்பட்ட விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
---------------------
திருப்பூர், செப்.29-
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 கிளைகளில் வெற்றிகரமாக மாநாடுகள் நடத்தப்பட்டு செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம்: பெரியார் காலனி - ஜார்ஜ் வர்கீஸ், முத்துகோபால்நகர் - ஆர்.சுகுமார், நேதாஜிநகர் - பி.பாபு, அனுப்பர்பாளையம் புதூர் - சேகர், அனுப்பர்பாளையம் (கிழக்கு) - எம்.பாண்டியராஜன், அனுப்பர்பாளையம் (மேற்கு) - பெரியசாமி, தண்ணீர்பந்தல் - ஏ.உமாநாத், திலகர்நகர் ஏ - கே.குப்புசாமி, திலகர்நகர் பி - சின்னசாமி, புதுக்காலனி - சந்திரமோகன், வேலம்பாளையம் ஏ - வெள்ளியங்கிரி, வேலம்பாளையம் பி - என்.சுப்பிரமணியம், பிடிஆர் நகர் - எம்.பாலசுப்பிரமணியம், சிறுபூலுவபட்டி - மணி, ரங்கநாதபுரம் - செல்வகுமார், அணைப்பாளையம் - மோகன், பெரியார் காலனி மாதர் ஏ - டி.இந்திராணி, பெரியார்காலனி மாதர் பி - ஆர்.கவிதா, வேலம்பாளையம் மாதர் - எஸ்.குணசுந்தரி, அணைப்பாளையம் மாதர் - பி.செல்வி, ரங்கநாதபுரம் மாதர் - வி.லட்சுமி, அனுப்பர்பாளையம் மாதர் - ஏ.கிருஷ்ணவேணி, மாணவர் அரங்கம் - டி.உமாசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)