Wednesday, October 01, 2014
தலைமை தமயந்தி மாசிலாமணி மாவட்ட கவுன்சிலர் தலைமையில் சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ் .கனகராஜ் உப .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர் சி .ஜெயபிரகாஸ் மாணவரணி செயலாளர் உட்பட 2000 ம் பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்புறம் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வர கர்நாடக கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தரராஜ், டி.என்.எஸ்.டி.சி., திருப்பூர் மண்டல செயலாளர் கிருஷ்ணன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் ,அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எஸ்.ஆர்.ஜெயக்குமார் , தம்பி மனோகரன், ஜெகதாம்பாள், பி.கே.முத்து, மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ்,
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார்நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, கே.கே.காளியப்பன், வி.கே.பி.மணி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பார்வார்டு பிளாக் ராஜசேகர், தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன் லீக் மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா,
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சி.டி,சி.தேவராஜ், கே.ஜி.பழநியப்பன், மணி, சி.எஸ்.கண்ணபிரான், ராஜசேகர், பொன்னுசாமி, சுகுமார்,கோபால், சோமு, பாலுச்சாமி, பன்னீர்செல்வம், குணசேகரன், விஸ்வநாதன், பாலு, சின்னசாமி, வினோத், ராஜேந்திரன், முபாரக், சேகர்,கிருஷ்ணன், நாட்டுக்காவலன், மகளிரணி ருக்குமணி, சுந்தராம்பாள், சரஸ்வதி, அன்னபூரணி,மல்லிகா, சரசம்மாள்,
உஷா ரவிக்குமார், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, எஸ்.பி.என்.பழனிசாமி, வே.அய்யாசாமி,சிவில் சப்ளை பாலு, ராஜேந்திரன், பி.கே.எஸ்.சடையப்பன், கவுன்சி லர்கள் முருகசாமி, ஆனந்தன்,
கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத் ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, வே.அய்யாசாமி, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், பாசறை சதீஷ், கோகுல், பேபி தர்மலிங்கம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன் அசோக் குமார், பாரதி பிரியன், மோட்டார் பாலு, சாரதா, இசாக், எம்.ஜி.குணசேகரன், கேபிள் ரபி, முகமது ஜக்கிரியா, பரமராஜன், செல்லமுத்து, முகமது யூனுஸ், செல்வராஜ் நித்தியானந்தம்,
Tuesday, September 30, 2014
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம்
திருப்பூர்
அன்புடையீர், வணக்கம்.
பொருள்: பண்டிகை கால சிறப்புப் பேருந்துகளைஇயக்குதல் – உரிய கட்டணம் வசூலிப்பதை உத்தரவாதப்படுத்த –கோருதல் – தொடர்பாக
தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளின் போது திருப்பூர் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான வெளிமாவட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வர வேண்டியுள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இதிலும் சாதாரண பேருந்து கட்டணங்களை வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதலான முறையில் கட்டணக் கொள்ளையடிக்காமல் உரிய முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இதுதவிர திருப்பூரிலிருந்து கோவை செல்ல அவிநாசி,பல்லடம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில்அவிநாசி வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அவிநாசிக்குச் செல்லும் பயணிகளை பெரும்பாலும் ஏற்றுவதில்லை. லாப நோக்கோடு, கோவை செல்லும் பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு, இதர பயணிகளை வயதானவர்களாக இருந்தாலும்கூடஇடையிலேயே நிறுத்தி இறக்கி விட்டு செல்லும் அவலமும் நடைபெறுகிறது.
எனவே இது போன்ற செயல்களையும் தடுத்து நிறுத்தி பொதுப் பயன்பாட்டிற்கான சேவைப்பிரிவில் இயங்கும் போக்குவரத்தை, லாப நோக்கோடு மட்டும் பார்க்கும் தனியார் பேருந்து நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த இந்த பிரச்சனைகளின் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில்கேட்டுக் கொள்கிறோம்.
திருப்பூர் : புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்குவதற்கான இயந்திரங்கள், திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன.
அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இப்பணிக்காக, தமிழகம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மாவட்ட அளவில் ஒரு இடத்தில், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்களுடன், வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு இதற்கான 'பிரின்டர்' தருவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ., 30 வரை, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் என சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். 2015 ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.சுருக்க முறை திருத்தத்தின் மூலம் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். 'ஸ்மார்ட்' கார்டு போன்ற அடையாள அட்டை அச்சிடப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25 முதல் வினியோகிக்கப்படும்.
வண்ண அடையாள அட்டை வழங்குவது குறித்த அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம். அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில், 25 ரூபாய் செலுத்தி புதிய அட்டை பெறலாம். அறிவிப்பு வரும் வரை, கருப்பு வெள்ளை அடையாள அட்டை மட்டும் வழங்கப்படும். முறையான அறிவிப்பு வந்த பிறகு, சிறப்பு முகாம் நடத்தி, அனைவருக்கும் வண்ண அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் சண்முகம், 50, உடல் நலம் பாதிக்கப்பட்டவர். மனைவி அகிலாண்டேஸ்வரி, 45, தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர்களது மகன் கார்த்திகேயன், 20, கோவையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கார்த்திகேயன், கல்லூரி செல்லும் நேரம்போக, மாலையில் அங்குள்ள மெடிக்கல் ஸ்டோரில் பணியாற்றினார். குடும்ப சூழ்நிலையை நினைத்து வருந்தி வந்துள்ளார். கடந்த 25ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகேயன், வீடு திரும்பவில்லை. காஞ்சி கோவில் அருகே உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. குன்னத்துர் போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்
சொத்து குவிப்பு வழக்கில், ஜெ.,வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், அ.தி.மு.க.,வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காலை 11.45 மணியளவில், கைகாட்டிப்புதூரை சேர்ந்த ஜெய ராஜ், 65 என்ற தொண்டர், பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு, "அம்மா வாழ்க,' என கோஷமிட்டவாறு, தீக்குச்சியை உரச முயன் றார். அதை பார்த்து அலறியடித்த கட்சி நிர்வாகிகள், ஓடிச்சென்று, தீப்பெட்டியை பறித்தனர். டீக்கடையில் இருந்து தண்ணீர் வாங்கி, அவர் மீது ஊற்றினர். இச்சம்பவத்தால் உண்ணாவிரத பந்தல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இது குறித்த விபரம் வருமாறு: திருப்பூர் மங்கலம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் தங்கராஜா, 45. பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி தங்கமணி, 38. மூன்று குழந்தைகள் உள்ளனர். தங்கராஜா அடிக்கடி மதுபோதையில் வந்து, மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்து வந்துள்ளார்.கடந்தாண்டு அக்., 4ம் தேதி இரவு, வழக்கம்போல் போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின், வீட்டிலிருந்த கத்தியால் மனைவியை சரமாரியாகத் தாக்கி, கொலை செய்ய முயன்றார். காயமடைந்த தங்கமணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜாரானார். இவ்வழக்கில் தங்கராஜாவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர் : ஆயுத பூஜை முடிந்ததும், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்' என பல்வேறு வகையான "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என வெளிமாவட்டங்கள்; மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளிமாநிலத்தவர்கள், மெஷின் ஆப்ரேட்டர், செக்கிங், அயர்னிங், ஹெல்ப்பர் போன்ற பலவகையான பணிகளில், ஷிப்ட், ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்களுக்கு பணி அடிப்படையில், ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. போனஸ் பெற்றுக்கொண்டு, குடும்பத்துக்கு தேவையான பண்டிகை கால பொருட்களை வாங்கியும், சொந்த ஊர்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுகின்றனர், தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறையை துரத்திய பிரச்னைகளால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கும் போனஸ் சதவீதமும், உயராமல் இருந்தது.தற்போது, பிரச்னைகள் நீங்கி, தொழில் துறை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள் வசம் பண்டிகை கால ஆர்டர்களும், ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் குளிர்கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களும் உள்ளன. தீபாவளி நெருங்குவதால், பின்னலாடை நிறுவனங்களில் ஆடை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆர்டர்களை குறித்த நேரத்துக்குள் அனுப்புவதில், அக்கறை காட்டி வரும் தொழில் துறையினர், பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தயாராகி வருகின்றனர். விஜயதசமி, ஆயுத பூஜையை தொடர்ந்து, வரும் 3ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பின்னலாடை துறையினரும், கூடுதல் போனஸ் வழங்க ஆலோசித்து வருகின்றனர்.
"டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ""ஆயுத பூஜை முதல், தொழிலாளர்களுக்கு படிப்படியாக போனஸ் பட்டுவாடா செய்ய, நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை கூடுதல் போனஸ் வழங்கப்படும்,'' என்றார்

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...