Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது பிறந்தநாளையொட்டி அவரும், அவரது நண்பர்களும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் சத்தம் போட்டு கொண்டாடினர். இந்த சத்தம் அப்பகுதியில் வசித்துவரும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைதொடந்து சிலர் அவர்களிடம் சென்று சண்டை போட்டனர். இதற்கு பட்டாசு வெடித்தவர்கள் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு பின்னர் கிரிக்கெட் மட்டை மற்றும் கம்புகளால் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்களை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்சை ஒருதரப்பினர் தடுத்து காயம்பட்டவர்களை ஏற்ற விடாமல் திருப்பி அனுப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்களுக்கு அவினாசி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து அங்கு வந்த உதவி கமிஷனர் ஜெயசந்திரன் அவர்களை சமாதானம் செய்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஏட்டு அற்புதம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்டதாக மனோஜ்குமார், நடராஜ், சிவசாமி, வேலுசாமி, ராசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
On Monday, October 13, 2014 by farook press in ,    
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்படி மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் மெட்ராத்தி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மணிகவுண்டர், சாமியப்பன், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்புச்சாமி, ஆறுச்சாமி உள்பட திரளான அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
On Monday, October 13, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார். இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சிங்கராஜ் திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இவருக்கு சக நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பதவி ஏற்ற நீதிபதி சிங்கராஜ் 1998 –ல் சேலம் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதியாக பணியை தொடங்கினார். பின்னர் திருச்சி மற்றும் பெரியகுளத்தில் ஜே.எம்.1 நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2008–ல் அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்தார். 2010–ல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2011–ல் பெரியகுளத்தில் சப்–ஜட்ஜ் ஆக பணிபுரிந்தார். இதைதொடர்ந்து பதவிஉயர்வு பெற்று நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.
On Monday, October 13, 2014 by farook press in ,    
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப்பெருமானின் அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று மொட்டையடிப்பதற்காக தமிழக சட்டசபை துணை சபாநாயகரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆலோசனைப்படி உடுமலை நகராட்சி துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமையில் 54 பேர் கடந்த 7–ந்தேதி உடுமலையில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோவில்களுக்கு சென்றனர். ஒவ்வொரு கோவிலிலும் 9 பேர் வீதம் மொத்தம் 54 பேர் மொட்டை போட்டனர். பின்னர் அவர்கள் உடுமலைக்கு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலளார் கே.ஜி.சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தியவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.மணிவாசகம், யு.கே.பி.ராதாகிருஷ்ணன், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வி.ஆர்.வேலுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.ஆறுமுகம், ஜி.தனலட்சுமி, மாவட்ட பேரவை துணை தலைவர் எஸ்.ரகுபதி, பனியன்துரை, கே.குமரேசன், ஜெ.மணிவண்ணன், உ.மா.குப்புசாமி, கே.ஆர்.பி.பாஸ்கர், சென்னை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, October 13, 2014 by farook press in ,    
உடுமலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரளாவை சேர்ந்த சஜீத் முதல் பரிசு பெற்றார்.
உடுமலை பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 7–வது ஆண்டு மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையை அடுத்துள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடந்தது. போட்டிகளை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சவுந்திரராஜன் வரவேற்றார்.
போட்டிகள் இந்தியன் ஓபன் கிளாஸ், ஓபன் கிளாஸ், எக்ஸ்பர்ட் கிளாஸ், நோவைஸ் கிளாஸ், பிகினர்ஸ் உள்ளிட்ட 8 பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டிகளில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் வீரர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சீறி பாய்ந்தனர். இலக்கை சென்றடைய மண்ணில் புழுதியை கிளப்பியபடி சென்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியன் ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த சஜீத்திற்கு முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கோவை போத்தனூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கு 2–வது பரிசாக ரூ.8 ஆயிரமும், கேரளாவை சேர்ந்த மகேஷ்க்கு 3–வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த மகேசுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சஜீத்துக்கு 2–வதுபரிசாக ரூ.5 ஆயிரமும், கோவையை சேர்ந்த ஜெகதீசுக்கு 3–வது பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது.
எக்ஸ்பர்ட் கிளாஸ் போட்டியில் சஜீத்துக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரமும், மகேசுக்கு 2–வது பரிசாக ரூ.5 ஆயிரமும், கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்துக்கு 3–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், நோவைஸ் கிளாப் போட்டியில் கோவை வீரர்களான எஸ்.பாண்டியனுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரமும், நவநீதனுக்கு 2–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3–வது பரிசாக விக்ரமுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

Sunday, October 12, 2014

On Sunday, October 12, 2014 by farook press in ,    
திருப்பூர் நல்லூர் பஸ்நிறுத்தம் அருகில் இந்து முன்னேற்ற கழக சார்பில் நடைபெற்ற கொடியேற்ற விழா மற்றும் பொது கூட்டம் இந்து முன்னேற்ற கழக மாநில செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற போது  அருகில் மாநில தலைவர் குணசேகரன்;, மாவட்ட செயலாளர் சந்தானம் மற்றும் பலர் உள்ளனர்.





On Sunday, October 12, 2014 by Unknown in    
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்தனை .
மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா பொய் வழக்கிலிருந்து விடுபட,வழக்கை ரத்து செய்யக்கோரியும் அ .இ. அ. தி. மு..க  கழகபொதுக்குழு உறுப்பினர்    மற்றும்    உடுமலை       நகர்     மன்ற துணைத்தலைவருமான      M .கண்ணாயிரம்  மற்றும் கழக உடன் பிறப்புக்கள் 54 பேர்கள் திருத்தணி,சுவாமிமலை,திருப்பரகுன்றம்,பழமுதிர்சோலை,திருச்செந்தூர்,பழனி ,ஆகிய கோவில்களில் அம்மா மீண்டும்  தமிழக முதலமைச்சர் ஆக வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து முடி காணிக்கை செலுத்தி வழிபட்டனர் 

On Sunday, October 12, 2014 by Unknown in ,    

On Sunday, October 12, 2014 by farook press in ,    


திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் .கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாக் வேண்டி  மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மற்றும் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.